..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
17:30
ram
என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.
இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்
பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது.
பின்னர் சூரிய மண்டலத்தின் தலைவரான சூரியனை சுற்றி வளம் வர ஆரம்பித்தது. பெயரில்லாத அக்கிரகத்தில் அப்போது கடுகளவு உயிரினம் கூட கிடையாது. சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு பிறகு கடல்கள் உருவாகின. அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்கடியில் பாக்டீரியாக்கள் உருவாயின கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன.
உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை. உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.
பின் பாம்பு, பல் போன்ற ஊர்வன தோன்றின பின்பு அவை படிப்படியாக வளர்ந்து டைனோசர்களாக உருப்பெற்றன 85 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6 கோடி ஆண்டு வரை பூமியில் நடைபெற்றது டைனோசர் போன்ற ஊர்வன உயிர்னங்களின் ஆட்சியே. டைனோசர்கள் பார்ப்பதற்கு ஒரு செல் போன் டவர் அளவு உயரம் இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே. பின்பு குட்டி போடு பால் கொடுக்கும் எலி போன்ற உயிரினங்கள் தோன்றின. குட்டி போடு பால் கொடுப்பது என்பது ஒரு ஆச்சரியமான பரிணாம வளர்ச்சியே.
mammals என்றழைக்கபடும் இந்த பாலூட்டிகளின் ஆட்சி சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இதில் ஒரு உயிரினம் தான் மனிதன். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளை போல பல விதமான மனிதர்களும் தோன்றினர். அதில் modern man என்றழைக்கபடும் நாம் தோன்றியது 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.
homo sapien என்றழைக்கபடும் நாம் முதலில் தோன்றியது africa காடுகளில் தான். அதுவும் முதலில் தோன்றியது ஒரு ஆண் அல்ல பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.அதுவும் ஐரோபிய வாழ் வெள்ளைகார பெண் அல்ல africa கருப்பு நிற பெண். ஆகவே விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே.. 1. நாம் (kuromeknan) 2. நியாண்டர்தால்(neandertal) மனிதன்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும், நியாண்டர்தால் மனிதனும் சமமாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். CRO-MAGNON என்றழைக்கபடும் நாம் பல்கி பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் அழிய தொடங்கியது. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும் படைத்திருந்தனர்.
africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை. இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.
17:20
ram
நோக்கியா Lumia 1520, 6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது. டூயல் LED ஃபிளாஷ் உடன் 20-மெகாபிக்சல் PureView கேமரா கொண்டுள்ளது. Lumia 1520 ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்க மற்றும் Q4 2013 ஐரோப்பிய சந்தைகளில் முதலில் கிடைக்கும் என்றும், இந்த ஆண்டுக்கு பின்னர் மற்ற சந்தைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்பார்த்தபடி, Lumia 1520 அம்சங்கள் மூன்றாவது விண்டோஸ் தொலைபேசி மேம்படுத்தல் கொண்டு புதிய வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 8 ஆம்பர் மேம்படுத்தலில் இயங்குகிறது. மேலும் Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர், மற்றும் 2GB ரேம் கொண்டுள்ளது. built-in வயர்லெஸ் சார்ஜ் ஃபன்ஷனாலிட்டி கொண்ட 3400mAh பேட்டரி கொண்டுள்ளது. Lumia 1520 முன் எதிர்கொள்ளும் 2 மெகாபிக்சல் HD கேமரா கொண்டுள்ளது.
இந்த கைப்பேசி மூன்று வண்ணங்களில் கருப்பு, சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் வரும். நோக்கியா Lumia 1520 கருப்பு வண்ண வகை மறுசுழற்சி பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய Lumia 1520 மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் மற்றும் 7GB கொண்ட Skydrive cloud சேமிப்பு இடம் ஏற்றப்பட்டு வருகிறது. 32 மற்றும் 64GB சேமிப்பு விருப்பங்கள், மற்றும் NFC உடன் வருகிறது.
நோக்கியா Lumia 1520 முக்கிய குறிப்புகள்
6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே
Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர்
ரேம் 2GB
20-மெகாபிக்சல் PureView கேமரா
விண்டோஸ் போன் 8
NFC
3400mAh பேட்டரி
17:13
ram
நோக்கியா நிறுவனம் Lumia 2520 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Lumia 2520, 10.1-இன்ச் முழு HD திரை மற்றும் 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது $ 499 விலையில் வருகிறது மேலும், டேப்லெட் 3G இணைப்புடன் வருகிறது.
Lumia 2520 பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில் முதலில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வெளியிடுவதைப் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இந்த டேப்லெட் இப்போது விண்டோஸ் RT மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.
Lumia 2520 டேப்லெட் முக்கிய அம்சங்கள் ஆகும்:
1920 x 1080 தீர்மானம், 10.1-இன்ச் முழு HD திரை கொண்டுள்ளது.
பிக்சல் அடர்த்தி 281 ppi உள்ளது.
6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா
2 மெகாபிக்சல் முன் கேமரா
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 Quad-core 2.2 GHz ப்ராசசர்,
2 ஜிபி ரேம்,
அதிகபட்சமாக 25 நாட்கள் காத்திருப்பு நேரம் உள்ளது
MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடியது,
USB 3.0 ஸ்லாட்,
ப்ளூடூத் 4.0,
WiFi
பகிர்வுக்காக NFC.
4G இணைப்பு
2 USB போர்ட்கள்.
விண்டோஸ் RT மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.
08:02
ram
• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.
• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.
• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு
அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும்.
இட்லியும் பூப்போல இருக்கும்.
• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.
• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும்
பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும்
சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில்
தேய்ந்துவிடும்.
• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் வீட்டின் மூலையில்
இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால்
சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர்
இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.
• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.
• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும்
வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க
இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.
• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
08:00
ram
வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.
வாஷிங்மெஷினில் அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வாஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்க வேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்து விடும். வாஷிங்மெஷினில் துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஆப் செய்துவிடவும்.
வாஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும் போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளேதோ அத்தனை சுற்றுகள் தான் சுற்றவேண்டும்.
வாஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மை துடைக்க வேண்டும்..ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.