
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய...