.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 28 October 2013

தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...

பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.

பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.


சோப்புத் தண்ணீர்

கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து, அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம்.

கள்ளிச்செடி

கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், கள்ளிச்செடியின் பாலில் இருந்து வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்.


 தேங்காய் நார்

தேங்காய் நாரைக் கொண்டு, சுவற்றில் இருக்கும் கம்பளிப்பூச்சிகளை ஒன்று சேர்த்து, அதன் மேல் தேங்காய் நாரை போட்டு எரித்தால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்.


வெள்ளை வினிகர்


வெள்ளை வினிகரை கம்பளிப்பூச்சியின் மீது தெளித்தால், அந்த வினிகரில் உள்ள ஆசிட், கம்பளிப்பூச்சியை உடனே கொன்றுவிடும்.


பூண்டு


பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அவை இறந்துவிடும்.


வெங்காயம்


தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தால், அந்த வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாசனையால், கம்பளிப்பூச்சிகள் வராமல் இருக்கும்.

ஜின்செங்


ஜின்செங் என்னும் வேரில் உள்ள சாற்றை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், அந்த வேரில் உள்ள கசப்புத் தன்மையால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்

 மிளகு


மிளகை பொடி செய்து, அதனை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கலாம்.

இது புகைப்பட பாஸ்வேர்டு.

http---www.vaptim.com-picword-index 

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது.

 பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் மீது இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும் அல்லது புகப்படத்தின் மையத்தில் கிளிக் செய்ய வேண்டும் என தீர்மானித்து கொள்ளலாம்.


அடுத்த முறை கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்யும் போது நாம் தேர்வு செய்த படம் ஸ்கிரின் சேவை போல வரவேற்கும். அதில் நாம் தேர்வு செயத வகையில் கிளிக் செய்தால் உள்ளே நுழைந்து விடலாம். வழக்கமான பாஸ்வேர்டை டைப் செய்யும் முறையை விட இது சுவாரஸ்யமானது. கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்வதற்கான நவீன வழி என்று இதை உருவாக்கிய வேப்டிம் தளம் வர்ணிக்கிறது.


எந்த புகைப்படம் தேவை, அதில் எந்த வகையான இலக்குகளை கிளிக் செய்ய அமைக்க வேண்டும் என்பதை இஷ்டம் போல தீர்மானித்து கொள்ளலாம்.இந்த சேவையை புகைப்பட பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம்.ஒருவேளை புகைப்பட பாஸ்வேர்டு ம‌றந்து போய்விட்டால் பிரச்ச‌னையில்லை , இந்த சேவையை அன் லாக் செய்வதற்கான ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமையான லாக் இன் முறை தேவை என்றால் டவுன்லோடு செய்து பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.


டவுன்லோடு செய்ய: http://www.vaptim.com/picword/index.html



பிக்வேர்டு எனும் பெயரிலேயே மற்றொரு டவுன்லோடு சேவையும் இருக்கிறது.


இந்த சேவை பிலேஷ்கார்டு முறையில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது.http://download.cnet.com/Picword/3000-2279_4-10223742.html

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.


இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன.


தீய நோக்கம் கொண்ட சாப்ட்வேர்களே மால்வேர் என்று இணைய உலகில் இகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகின்றன.விஷமத்தனமான வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் நுழைப்பது,பாஸ்வேர்டு திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவது, பயனாளிகளின் இணைய நடவடிக்களைகளை உளவு பார்ப்பது, கிரிடிட் கார்ட் பயன்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது என பல்வேறு இணைய குற்றங்களுக்கு மால்வேர்கள் தான் நுழைவு சீட்டாக இருக்கின்றன.


பொதுவாக விண்டோஸ் சார்ந்த கம்ப்யூட்டர்களுக்கு வேட்டு வைத்டு வந்த இந்த வில்லங்கமான சாப்ட்வேர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை பதம் பார்த்து வருவது தான் கவலை தரும் விஷயம்.குறிப்பாக ஆன்ராய்டு போன்களை மால்வேர்கள் அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.ஸ்மார்ட் போன் சார்ந்த பயன்பாட்டை மேம்படுத்த கைகொடுக்கும் அப் எனப்படும் செயலிகள் வழியாக மால்வேர்கள் உள்ளே நுழைந்து விடுவதாக கருதப்படுகிறது. 


எனவே நீங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருந்தால் மால்வேர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாம் சரி, உங்கள் போனில் மால்வேட்ர் குடிகொண்டிருக்கிறதா என எப்படி கண்டு பிடிப்பது? மால்வேர்களின் ஸ்டைலே உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போனுக்குள் நுழைந்து விடுவதாக இருக்கின்றன.எனவே அவை போனில் தங்கள் வேலை காட்டத்துவங்கும் போது தான் அவற்றை கண்டுபிடிக்க முடியும்.


ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே மால்வேர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொண்டு விடலாம். உதாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வழக்கத்துக்கு அதிகமான தகவல்கள் (டேட்டா) பயன்படுத்தப்படுகின்றன என்றால் அது மால்வேரின் வேலையாக இருக்கலாம். பெரும்பாலான மால்வேர்கள் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவே உருவாக்கப்படுவதால் அவை போனின் பின்னணியில் இருந்து தகவலகளை திரட்டிக்கொண்டே இருக்கும்.எனவே உங்கள் போனில் இருந்து தகவல் பயன்பாடு அதிகரித்தால் மால்வேர் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.


அதே போல் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்பாடு ஸ்மார்ட்டாக‌ இல்லாமல் போவதும் கூட மால்வேர் வேலையாக இருக்கலாம்.எனவே திடிரென காரணமே இல்லாமல் உங்கள் போன் செயல்பாடு மந்தமானாலோ அல்லது ஒவ்வொரு செயலுக்கும் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டால் மால்வேர் பிரச்ச்னையாக இருக்கலாம்.
போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதும் அழைப்புகளை சரியாக பேச முடியாமல் போவதும் கூட மால்வேரின் காரணமாக இருக்கலாம்.


ஆக உங்கள்  போனின் செயல்பாடு பிரச்சனைக்குறியதாக இருந்தால் மால்வேர் பாதிப்பாக இருக்கலாம் என யூகித்து கொள்ளலாம். சரி, மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்ததாக அவற்றை நிக்குவது எப்படி? இது குறித்து கவலையே வேண்டாம். காரணம் மால்வேர்களை நீக்குவதற்கான செயலிகள் இருக்கின்றன.


 இந்த செயலிகளை கூகுல் ஸ்டோரிலேயே டவுண்லோடு செய்யலாம். 360 மொபைல் செக்யீரிட்டு, அவாஸ்ட் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.நார்ட்டன்,காஸ்பர்ஸ்கி போன்ற பிரப‌ல வைரஸ் தடுப்பு சேவை நிறுவங்களும் இத்தகைய செயலிகளை வழங்குகின்றன.
ஆனால் மால்வேர்களை அப்புறப்படுவத்துவதை காட்டிலும் அவற்றை உள்ளே விடாமல் இருப்பது சிறந்த வழி. இதற்கும் மால்வேர்கள் போனுக்குள் எட்டிப்பார்க்க வழியில்லாமல் செய்ய வேண்டும். 

மால்வேர்களுக்கு செயலிகள் தான் வாகனம். கூகுல் பிலே ஸ்டோர் செயலிகளை அலசிப்பார்த்தே அனுமதித்தாலும் வில்லங்கமான செயலிகள் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகின்றன.எனவே செயலிகளை டவுண்லோடு செய்யும் முன் நீங்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
புதிய செயலிகளை தேடிப்பார்த்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த ஒரு செயலியையும் டவுண்லோடு செய்யும் முன் அவை ஆபத்தில்லாதவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு எளிய வழி செயலி பற்றி மற்ற பயனாளிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை படித்து பாருங்கள். அந்த செயலி பிரச்ச‌னைக்குறியது என்றால் பயனாளிகள் அவை பற்றி குறிப்பிட்டிருக்கலாம். 


அடுத்ததாக செயலியை உருவாக்கிய சாப்ட்வேர் நிபுணர் அல்லது சாப்ட்வேர் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவரது அல்லது அந்நிறுவனத்தின் பிற செயலிகள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மூலமே அவை நம்பகமானவையா என தெரிந்து கொள்ளலாம்.


மற்ற இடங்களில் இருந்து செயலிகளை டவுண்லோடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.சில செயலிகள் சூப்பர் யூசர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டும் . இவை கூட சில நேரங்களின் மால்வேருக்கான வழியாகிவிடலாம்.


எல்லாவற்றுக்கும் மேல் கம்ப்யூட்டரில் வைரஸ் ஸ்கேன் செய்வது போல ஸ்மார்ட்ட் போனிலும் அடிக்கடி வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

பார்வையற்ற பெண்ணை காதலிக்கும் 5 ஹீரோக்கள்!


 Blind woman in love heroes of 5



பார்வையற்ற பெண்ணை 5 ஹீரோக்கள் காதலிக்கும் கதையாக உருவாகிறது உயிர்மொழி.

 இதுபற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது:


5 வகை குணம் கொண்டவர்களாக மனிதர்களை பிரிக்கலாம்.


இந்த 5 குணம் கொண்ட வாலிபர்கள் பார்வையற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள்.


அவர்கள் அவள் மீது காதல் கொள்கின்றனர்.


 அவர்களின் பிடியில் சிக்கும் அப்பெண் படும்பாடுதான் கதை.


ஐந்து குணம் கொண்டவர்களாக சர்தாஜ், சசி, சாம்ஸ், ராஜீவ், பாபி ஆண்டனி

 நடிக்க பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் கீர்த்தி.


இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.


கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.


 அனைத்து பணிகளும் தற்போது முடிந்துவிட்டது.


குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.


ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் நிறுவனம் இணைந்து


தயாரித்திருக்கிறது. இவ்வாறு இயக்குனர் ராஜா கூறினார்

நோக்கியா ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகம்!



அபுதாபியில் நடைபெற்ற விழாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என நோக்கியா பெயரிட்டுள்ளது.

மூன்று ஆஷா ஃபோன்கள் பிளாக், பிரைட் ரேட், பிரைட் கிரீன், யெல்லோ, சியான் மற்றும் வைட் போன்ற ஐந்து வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த மூன்று மொபைல்களும் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் சந்தையில் கிடைக்கிறது. மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது. இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.

இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது. ஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.

ஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது. மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை. இதன் விலைகள் முறையே ஆஷா 500 ரூ.4,250, ஆஷா 502 ரூ.5,490, மற்றும் ஆஷா 503 ரூ.6,100 விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

நோக்கியா ஆஷா 500 முக்கிய குறிப்புகள்:

2.8-அங்குல QVGA டிஸ்ப்ளே

2 மெகாபிக்சல் பின்புற கேமரா

இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

நோக்கியா ஆஷா 502 முக்கிய குறிப்புகள்:


3 அங்குல QVGA டிஸ்ப்ளே

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா

இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு

நோக்கியா ஆஷா 503 முக்கிய குறிப்புகள்:

வளைந்த கொரில்லா கண்ணாடி 3 அங்குல QVGA டிஸ்ப்ளே

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல்

இரண்டு வகைகளில்-ஒற்றை சிம் மற்றும் எளிதாக இடமாற்று இரட்டை சிம்

MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய சேமிப்பு.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top