
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சிபக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில்...