.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 30 October 2013

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

உறவுகள் மட்டுமல்ல
 ஊரும் மரணத்திற்கு அழுதால்
 வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
-
—————–
-
இறப்பு இல்லை
 இறந்தும் வாழ்கிறார்கள்
 பொதுநலவாதிகள் !
-
——————
-
வராது நோய்
 பசித்த பின்
 புசித்தால் !
-
———————
-
உச்சரிக்க வேண்டாம்
 முன்னேற்றத்தின் எதிரிகள்
 முடியாது தெரியாது நடக்காது !
-
———————-
 -
நாளை என்று
 நாளைத் தள்ளிட
 நாள் உன்னைத் தள்ளும் !
-
——————
-
உடலை உருக்கும்
 உருவமில்லா நோய்
 கவலை !
-
——————–
-பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !

நல்லது நினைக்க நடக்கும் நன்மை..!

வளர்ப்போம்
புறத்தில் மரம்
அகத்தில் அறம்
-
——————–

நல்லது
நினை பேசு செய்
நடக்கும் நன்மை !
-
—————–
-
உணருங்கள்
ஆடம்பரமன்று அவசியம்
கல்வி !
-
—————–
-
சேமிப்பில் சிறந்தது
வளமாக்கும் சேமிப்பு
மழை நீர் சேமிப்பு !
-
——————
-
இல்லங்களில் இன்று
வழக்கொழிந்தது வரவேற்பு
தொ(ல்)லைக்காட்சி !
-
——————–
-
தேய்பிறை
வளர்பிறையாகுமா ?
அரசுப்பள்ளிகளில் தமிழ் !

விசிலடிக்கும் பால் குக்கர்…!

                                              

அப்போ தமிழக வீடுகளில் பால் குக்கர்கள்
 விசில் அடித்தன..
-

இப்போ தமிழக வீடுகளில் சார்ஜ் பத்தாமல் UPS கள்
 விசிலடிக்கின்றன
-
————————————————————
-
அப்போ, தமிழன் |நீ மேலத்தெரு பரமன் மகன்தானே?
நீ கீழத்தெரு கிருஷ்ணன்தானே! என அடையாளம்
 காணப்பட்டான்.
-
இப்போ நீங்க ப்ளாட்தானே! நீங்க ப்ளாட்தானே?ன்னு
 அடையாளம் காணப்படுகிறான்..!
-
—————————————————————-
 -
அப்போ அன்பை கொட்டும் மனிதர்கள் நிறைய
 இருந்தாங்க,
-
இப்போ மனிதர்களா இருக்கறவங்க மட்டுமே அன்பைக்
 காட்டுறாங்க..!
-
———————————————————-
 -
அன்றையதமிழன் செலவு செய்ய யோசிச்சான்
-
இன்றய தமிழன் செலவு செய்த பிறகு யோசிக்கிறான்!

ஜானகியுடன் பாடிய தனுஷ்!



வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.


இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.


தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது.




ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார்.

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.

கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.

உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top