.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

உன்னோடு இருந்திருப்பேன்…


சுகம் தரும் உலகம் தான்,
 
பல நண்பர்கள் என்னோடு,
 
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
 
இருந்தென்ன பயன்
 
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
 
தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்
 
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….
 
**********

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

10-mo 
 
இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள். இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.


 இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.


மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும். திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.


 போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது?

samsung 
 
 
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது… அதே சமயம் தீபாவளி பர்சேஸ் ஒரு சிலருக்கு இனிமேல்தான் தொடங்கும். ஆனால் உங்களுக்கென்றே பிரத்யேகமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க நினைத்திருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதையே ஒரு பெரிய குறிக்கோளாகவே வைத்திருப்பார்கள்.


ஒரு நல்ல காஸ்ட்லி போன் வாங்க நீங்க தீர்மானிச்சிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து படியுங்கள். காஸ்ட்லி போன் வாங்குவதால் பல நன்மைகள் உண்டு. நல்ல தரமிக்க டிஸ்பிளே, அதிக பிக்சல் கொண்ட கேமரா, அதிக உள்ளக நினைவகம், மெமரிகார்ட் மூலம் அதிகமாக கோப்புகளை சேமித்து, சேகரித்து வைக்கும் வசதி. அதிக நாள் உழைக்க கூடிய, நீண்ட நேரம் மின்சக்தியை வழங்க கூடிய பேட்டரிஇப்படி நிறைய உண்டு. காஸ்ட்லி ஐட்டம் வாங்குவது என முடிவெடுத்துவிட்டீர்கள். எந்த கம்பெனி போன் வாங்கனால் நல்லது? இப்படியும் ஒரு சில குழப்பம் வரும். தரமென்று வந்துவிட்டால் அதை ஒப்பு நோக்கிதான் வாங்க வேண்டும். இங்கு எனக்குத் தெரிந்த சில போன்களையும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.. இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு பிடித்தமான விலையில் உள்ள போன்களை தேர்வு செய்யுங்கள்.


1. Nokia Lumia 1020

                                            lumia1020all_large_verge_medium_landscape

இதுதான் லேட்டஸ்ட் போன். நோக்கியா கம்பெனி சமீபத்தில் தான் வெளியிட்டது. விற்பனையில் சக்கைப் போடு போட்டுக்கொண்டுள்ளது. இது ஒரு விண்டோஸ் போன். இதில் 4.5 அங்குல அகலம் AMOLED touch screen இருக்கு. வயர்லஸ் சார்ஜிக் வசதி இருக்கு. 41 மெகா பிக்சல் கேமரா, 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor, மியூசிக் அப்ளிகேஷன், நோக்கியா மியூசிக், மிக்ஸ் ரேடியோன்னு ஏகப்பட்ட வசதிகள் குவிஞ்சு கிடக்கு. இதில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

  • 1.2 MP Secondary Camera
  • Powered by Windows Phone 8 OS and 2 GB RAM
  • Wireless Charging
  • Full HD (1080p) Recording
  • 41 MP Primary Camera with PureView technology and Optical Image Stabilisation
  • Carl Zeiss Tessar lens
  • Music apps: Nokia Music; Mix Radio
  • Comes with MS Office and Free Voice-guided Navigation
  • 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor
இவ்வளவு சிறப்பு வசதிகளுடன் கண்ணைக் கவரும் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும் இந்த நோக்கியா 1020 போனின் விலை ரூபாய் 47222./- விலைக்கேற்ற தரமும் வசதிகளும் அடங்கியிருப்பது சிறப்பு.

2. Samsung Galaxy Note 3 N9000 (Jet Black)

SM-N9000ZKEINU-1235650-0

இந்த போனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரபல நிறுவனம் சாம்சங்கின் தயாரிப்பு இது. சங்சங் நிறுவனத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. தரம்.. தரம்.. தரம்… அதுதான் இந்த நிறுவனத்தில் தாரக மந்திரமே அதுதான்.. ஆயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி.. ஐம்பதாயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி…. விலைக்கேற்ற தரமும், உழைப்பும் நிச்சயம் உண்டு. இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது.. விலை 46899. இதுல இரண்டு ஐட்டம் இருக்கு. 1. jet black, 2. classic white. இந்த இரண்டு போன்களில் வெளிப்புற நிறங்கள் மட்டுமே வேறுபாடு.. உள்ளிருக்கும் பகுதிகள் எல்லாமே ஒன்றுதான். அதாவது வெளிப்புற உறை மட்டுமே நிறத்தில் வேறுபடும்.

இதிலுள்ள முக்கியமான சிறப்பம்சங்கள் மட்டும் கீழே (ஆங்கிலத்தில்)

  • NFC Support
  • Dual Camera: Dual Shot / Dual Recording / Dual Video Call
  • Android v4.3 (Jelly Bean) OS
  • 2 MP Secondary Camera with Smart Stabilization and BSI Sensor
  • Full HD (1080p) Recording and Playback Support
  • 13 MP Primary Camera with Auto Focus and BSI Sensor
  • Octa Core Processor (1.9 GHz Quad + 1.3 GHz Quad) and 3 GB RAM
  • Samsung Smart Scroll and Samsung Smart Pause
  • 5.7-inch Full HD Super AMOLED (1920 x 1080) Display
  • S Pen Optimized Features: Air Command; Action Memo; Scrapbook; S Finder; Pen Window; Multi Window; Direct Pen Input
  • Air Gesture and Air View
3. Micromax Canvas Doodle 2 A240

samsung 

மைக்ரோமேக்ஸ் கம்பெனி உள்நாட்டு நிறுவனம். இதனுடைய தயாரிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தியே இருக்கும். இந்தியபோன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிறுவனம். இந்நிறுவனத்தில் அதிகபட்ச விலையுடன் போன் இது. விலை ரூபாய் 17499. இந்த போனில் 12 மெகா பிக்சல் கேமரா, 5.7 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கோட் கோர் பிரசசர்ன்னு நிறைய விஷயங்கள் இருக்கு.
இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • 2 MP Primary Camera
  • 5 MP Secondary Camera
  • 5.7-inch Capacitive Touchscreen
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 1.2 GHz Quad Core Processor
  • Dual SIM (GSM + GSM)
4. Sony Xperia ultra சோனி எக்ஸ்பீரியா:

                                                 Sony-Xperia-Z-Ultra-smartphone

சோனி நிறுவனத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.. ஜாப்பன் நிறுவனம் இது.. இதனுடைய தயாரிப்புகள் எல்லாமே மிக பிரபலமானவை. ஸ்மார்ட் போன் விற்பனையிலும் இப்போது புது புது மாடல் போன்களை தயாரித்து முன்னணி வகிக்கிறது.. குறிப்பாக சொல்வதென்றால் தண்ணீரிலேயே பயன்படுத்தும் ஸ்மார்ட் போன். இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது. Sony Xperia ultra. இதனுடைய விலை ரூபாய் 41199. இதில் 8 மெகா பிக்சல் கேமரா, ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ். , 6.4 அங்குல ஹெச்.டி திரை, HD recording, வைபை, டஸ்ட் ப்ரூப், வாட்டர் ப்ரூப்ன்னு எக்கச்சக்க வசதிகள் இதுல இருக்கு..


இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • Android v4.2 (Jelly Bean) OS
  • 6.4-inch Full HD Display
  • 2.2 GHz Qualcomm Snapdragon 800 Quad Core Processor
  • Full HD Recording
  • 16 GB Internal Memory and 2 GB RAM
  • Ultra Slim; Dust-proof and Water Resistant
  • 2 MP Secondary Camera
  • NFC Enabled
  • Wi-Fi and WiFi Hotspot Support
5. Karbonn S5 titanium – கார்பன் மொபைல்: 

karbonn vs nexus 

கார்பன் மொபைலும் இப்போ ஸ்மார்ட் போன் தயாரிப்புல பயங்கரமான வளர்ச்சி அடைந்திட்டு வருதுங்க.. இதுல காஸ்ட்லி ஐட்டம் என்று பார்த்தால் இரண்டு போன்களை சொல்லலாம். ஒன்னு karbonn S5 Titanium, இன்னொன்று karbonn Titanium s9. முதல் போன் ரூபாய் 12700. இரண்டாவது டைட்டானியம் எஸ்9 போனின் விலை ரூபாய் 17990. இதுல 13 மெகா பிக்சல் கேமரா இருக்குங்க. வீடியோ,படங்கள்ன்னு நல்ல தரமிக்கதா எடுக்கலாம். டூயல் சிம் வசதி. 5.5 அங்குல தொடுதிரை. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ன்னு நிறைய விஷயங்கள் இதுல இருக்கு.


இரண்டாவது இருக்கிற karbonn Titanium s9 போனோட சிறப்பம்சங்கள்:


1. 1.2 GHz Quad Core Processor
2. Wi-Fi Enabled
3. Dual SIM (GSM + GSM)5 MP Secondary Camera
4. Android v4.2 (Jelly Bean) OS
5. Expandable Storage Capacity of 32 GB
6. 13 MP Primary Camera
7. 5.5-inch Capacitive Touch screen

விஸ்வரூபம் ரகசியம்!

vishwaroopam

கமலின் விஸ்வரூபம் படத்தின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகநாயகனின் படம் என்றாலே பல சுவாரசியமான செய்திகள் மறைந்திருக்கும்.

ஆனால் அவற்றையெல்லாம் வெளிவிடாமல் ரகசியமாக காத்து வருகிறார் கமல்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் ரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது.


 அது என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் காட்சிகள் அனைத்தும் அடையாறு சத்யா ஸ்டுடியோ மைதானத்தில் எடுக்கப்பட்டவையாம்.

அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படும் காட்சிகள் கூட உள்ளூ‌ரில் எடுக்கப்பட்டவைதானாம்.

எல்லாமே கிராபிக்ஸ் வேலைகள் தான் என்ற ரகசியம் இப்போது தான் வெளிவந்துள்ளது.

"தல" ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு மாட்டுகிறார்!

ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தல அஜித்தின் ஆரம்பம் படம் இன்று(அக்டோபர் 31) தமிழகம் எங்கும் வெளியானது.
பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்- அஜித் கூட்டணியில் உருவான படம் ஆரம்பம்.


இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா- டாப்சி நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, ஆடுகளம் கிஷோர் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயாரித்துள்ளார்.


இப்படம் இன்று தமிழகம் முழுக்க 1400 தியேட்டர்களில் ரிலீசானது.


ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அஜித்தின் ஆரம்பம் படம் ஒருவாரத்திற்கு புக்காகிவிட்டது.
சென்னையில் அதிரடி பட்டாசுகளோடு, ரசிகர்களின் கூட்டம் சென்னை தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது.


சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே படம் வெளியானது.


சென்னை, ராக்கி தியேட்டரில் 4.30 மணிக்கும், காசி தியேட்டரில் 5மணிக்கும் வெளியானது, கோவையில் அதிகாலை 4 மணிக்கு படம் தொடங்கியது.
சென்னையில் ரசிகர்களின் கூட்டத்தோடு சிம்பு, இயக்குநர் ராஜேஷ், டாப்சி, ஞானவேல் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே அஜித்தின் ஆரம்பம் படத்தை சென்று பார்த்தனர்.


அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர், படத்தில் தல வந்து ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு அதை மாட்டுவார், அ‌ந்த காட்சியை பார்த்துவிட்டு நான் ஒரு நடிகன் என்பதையும் மறந்து ஒரு ரசிகனாக கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் தாணு, நலிந்து போன தயாரிப்பாளர் ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் அஜித் தான். அந்த மனப்பான்மை தல ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை தவிர்த்து மதுரை, கோவை, திருச்சி, சேலம் என்று அனைத்து ஏரியாக்களிலும் ஆரம்பம் படத்திற்கு கூட்டம் களைகட்டி காணப்படுகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top