.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 4 November 2013

நண்பர்களுக்கு உதவும் விஜய சேதுபதி!

 Vijaya sethupathy help to friends
 
'விஜய சேதுபதி படமா, நம்பி தியேட்டருக்கு செல்லலாம்' என்று, ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, கிடு கிடு வென வளர்ந்து விட்டார்.


 அவர். ஆனால், கைவசம் எட்டு படங்கள் வரை வைத்திருப்பதாக சொல்லும் விஜய சேதுபதி, 'இன்னும் இரண்டு, மூன்று ண்டுகளுக்கு, என் கால்ஷீட் டைரி புல்லாக உள்ளது' என்று, புதிய படங்களை ஏற்க தயங்கி வருகிறார்.


 அதேசமயம், தன் நிலையை சிலரிடம் கூறும் அவர், தனக்காக ஆண்டுக்கணக்கில் வீணாக காத்திருக்காமல், அந்த கதையை வேறு நடிகர்களை வைத்து படம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார்.


 மேலும், தன் நட்பு வட்டார நடிகர்கள் சிலரையும் கைகாட்டி விடும் விஜய சேதுபதி, தன் டங்களில் நடித்த, சில வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு சிபாரிசு செய்து, அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி வருகிறார்.

செம்பை விருதுக்கு கத்ரி கோபால்நாத் தேர்வு!

 Temple images

குருவாயூரப்பன் கோவிலின், செம்பை விருதுக்கு, பிரபல, சாக்ஸபோன் இசைக்கலைஞர், கத்ரி கோபால்நாத், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம் சார்பில், கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு, இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவாக, ஆண்டு தோறும், செம்பை விருது வழங்கப்படுகிறது.

நடப்பாண்டிற்கான, செம்பை விருதுக்கு, பிரபல, சாக்ஸபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேவஸ்தான நிர்வாக சமிதி உறுப்பினர், பரமேஸ்வரன் உட்பட, பலர் அடங்கிய, நடுவர் குழுவினர், விருதுக்குரிய கலைஞரை தேர்வு செய்துள்ளனர்.வரும், 28ம் தேதி நடக்கும், குருவாயூர் செம்பை சங்கீத விழாவில், கத்ரி கோபால்நாத்திற்கு விருது வழங்கப்படும்.

ஷங்கர் விளக்கம் - 'ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஷங்கர் டைரக்ட் செய்து வரும் பிரமாண்ட படம் 'ஐ'. விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறார். நல்ல அழகான இந்திய நடிகைகள் தமிழ் நடிகைகள் இருக்கும்போது வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் ஷங்கர். அது ஏன் என்பதற்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: 'ஐ' என்றாலே அழகை குறிக்கும் சொல். படத்திலும் அழகிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அழகை பற்றித்தான் படம் பேசுகிறது. அதற்கு அழகான ஹீரோயின் தேவைப்பட்டார். நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை ஆடிசன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருமே அழகுதான், ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த அழகு தேவதை உருவத்துக்கு யாரும் செட்டாகவில்லை.

அப்புறம்தான் எமி சாய்சுக்கு வந்தாங்க. பிரிட்டீஷ் பொண்ணு சரியா வரமாட்டாங்கன்னுதான் தோணிச்சு. பி.சி.ஸ்ரீராம்தான் ஆடிசன் பண்ணி பார்த்துடலாமுன்னு சொன்னார். அதன்படி அவரை அழைச்சிட்டு வந்து ஆடிசன் பண்ணினோம். ஸ்கிரீன்ல தெரிஞ்சது எமி இல்லை. என் மனசுக்குள்ள இருந்த கேரக்டர். அவரையே நடிக்க வச்சோம்.

நடிப்பிலும் நான் எதிர்பார்த்ததை விட ஸ்கோர் பண்ணினாங்க. வசனத்தை தமிங்கிலீசில் எழுதிக் கொடுத்துடுவோம். ராத்திர பூரா உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிட்டு மறுநாள் காலையில எக்ஸ்பிரசனோடு பேசி அசத்திடுவாங்க. படம் பார்க்கும்போது என் சாய்ஸ் சரிதான்னு உங்களுக்கும் தெரியும் என்கிறார் ஷங்கர்.

விஸ்வரூபம்-2 வாய்ப்பு வந்தது எப்படி? இசை அமைப்பாளர் ஜிப்ரான் விளக்கம்!

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வரூபம்-2 இதற்கு பின்னணி இசை அமைத்து வருகிறவர் ஜிப்ரான்.

வாகை சூடவா குட்டிப்புலி படங்களுக்கு இசை அமைத்தவர் அடுத்து ஒரே ஜம்ப்பில் கமல் படத்துக்கு வந்துவிட்டார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி ஜிப்ரான் கூறியிருப்பதாவது:


 "பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே இசை ஆர்வம். பத்தாவதோடு படிப்பை -முடிச்சிட்டு கீ போர்டில் 8வது ஸ்டேஜ் வரைக்கும் படிச்சேன். விளம்பர படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தப்போ சற்குணம் நட்பு கிடைச்சுது.

அதன் மூலமா வாகைசூடவா கிடைச்சுது. சற்குணம் சிபாரிசுல குட்டிப்புலி கிடைச்சுது. என்னோட வாகைசூடவா பேக்ரவுண்ட் மியூசிக் கமல்சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாம். வைரமுத்து சார்கிட்ட சொல்லியிருக்காரு. திடீர்னு ஒரு நாள் கமல்சார் ஆபீசிலிருந்து போன் பண்ணி, சார் உங்களை மும்பை வரச்சொன்னாருன்னு சொன்னாங்க. என்னால அந்த இன்ப அதிர்சியை தாங்க முடியல.

அடிச்சுபிடிச்சு மும்பைக்கு போனா கமல்சார் ரொம்ப கூலா "வாங்க ஜிப்ரான் ஒர்க்க சார்ட் பண்ணிடலாமா?"ன்னு கேட்டார். அவரோடு உட்கார்ந்து வேலைய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல அவரோட ஒர்க் பண்றது கஷ்டமா இருந்திச்சு. இசையோட அத்தனை ஏரியாவையும் தெரிஞ்சு வச்சிருக்காரு. அவரே மியூசிக் பண்ணிடலாம்.


நேரம் இல்லாமத்தான் என்கிட்ட கொடுத்திருக்கார்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ 75 சதவிகித வேலையை முடிச்சிட்டேன். விஸ்வரூபம்-2 என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போவுதுன்னு எனக்கே தெரியல" என்கிறார் ஜிப்ரான்.

டிகிரி முடித்தவர்களுக்கு கத்தோலிக் சிரியன் வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு!

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கத்தோலிக் சிரியன் வங்கி முக்கியமான ஒன்று. இது சுதேசி இயக்க காலத்திலேயே கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கிறது.இந்த வங்கியில் புரொபேஷனரி துணை மேலாளர்கள் பதவியில் உள்ள 300 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

                               nov 4 - vazhiatti bank
 
வயது :

கத்தோலிக் சிரியன் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


தகுதிகள் :

 குறைந்த பட்சம் பட்டப் படிப்பு தேவை. அறிவியல் மற்றும் பொறியியல் புலத்தை சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடனும், இதர பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட இதர 6 மையங்களில் நடத்தப்படும்.முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் பயோ-டேடா படிவத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.11.2013

முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி 


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top