
நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை. ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால், சூப்பர்...