.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 6 November 2013

இசைஞானி இளையராஜா - தாயைத் தெய்வமென வணங்கு!

உன் தாய் உன்னைப் பெற்றபோது பட்ட
பிரசவ வேதனைக்கு – ஈடாக – நீ என்ன
திருப்பித் தர முடியும்?

-
மனிதனாக – எத்தனைப் பிறவியெடுத்தாலும்
அத்தனைப் பிறவியலும்
அன்னையை
வேதனைப்படுத்தாமல்
நீ பிறக்க முடியாது!

-
அந்த வேதனைக்குப் பரிகாரமாக
நீ எது செய்தாலும் – அது குறையுடையதே!
அதனால்
உன் தாயைத் தெய்வமென வணங்கு!
அந்த வணக்கம் -
எந்த பள்ளத்தையும் நிறைவு செய்துவிடும்.


மனதால்….கவிதை!!




அன்புத் தாயே!
மரணத்தின் கதை கேளாய்…
என்
திரும(ர)ணக் கதை கேளாய்!
வாயைக் கட்டி,
வயிற்றைக் கட்டி,
உதிரம் சிந்தி
உழைத்த உழைப்பெல்லாம்
விழலுக்கு இறைத்த
நீராகி விட்டதம்மா!
ஐந்து காசு பெறாதவனுடன்
அட்சதை தூவி
அனுப்பி வைத்தாய் என்னை
அவன்
ஆண்பிள்ளை என்றதனால்…
அரை லட்சம்
சம்பாதித்தும்,
அடிமை வாழ்வு
வாழ்கிறேன் என்பதை
நீ அறிவாயோ?
மீண்டு வர வழியில்லை
மீட்டெடுக்க யாருமில்லை
மீளா உலகம் – நீ
சென்றதனால்!
உயிருள்ள சடலமா
உலா வருகிறேன்…
மனதால்
மரித்து விட்டதனால்!

விடியல்.. கவிதை!!


நிலவின் குளிர் தாங்கா அலையொன்று

மீனாக உருமாறித் தாவிக் குதிக்கிறது

மேகக் கூட்டுக்குள்

சலனம் கலைக்கப்பட்ட கோபத்தில்

தகிக்கத் தொடங்குகிறது

சூரியப்பறவை

மெனோபாஸ்.(Menopause). பாகம் 1 ..ஆண்களுக்கு மட்டும்!

45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ
அல்லது உங்க அம்மாவிடமோ ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?..

“ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..”

“முன்பு எல்லாம் சாதுவா இருப்பாங்க..இப்ப ரொம்ப கோவ படறாங்க…
ஒரு சின்ன விஷயத்துக் க்கெல்லாம் கத்தறாங்க..பேசவே பிடிக்கல
ரொம்ப சோம்பேறியாயிட்டா…எப்டி வேலை செய்வா இப்ப எப்ப பார்த்தாலும் மூதேவியாட்டம் படுத்துகிட்டே இருக்கா “

இப்படி ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்களா?

nov 6 - lady menobous
 
கொஞ்சம் ரிலாக்ஸ் ..!அவங்க மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க..!

அவங்க உடம்புல பல விதமான ஹார்மோன்கள் படுத்தும் பாடின் வெளிப்பாடுதான் இந்த மாதிரியான கோபங்களும் எரிச்சல்களும்..பல பெண்களுக்கே தெரியாமல் அவஸ்தையுடன் அவர்கள் கடக்கும் பருவம் தான் இந்த மெனோபாஸ் பருவம்.

மெனோபாஸ் பருவம்னா என்னன்னு கேட்கறீங்களா?
பெண்களுக்கு மாத விடாய் அதாவது பீரியட்ஸ் நிற்கும் பருவம் தான் இந்த மெனோபாஸ்..

ஒரு பெண்ணுக்கு வயதுக்கு வருவதும்,திருமணமும் குழந்தைப் பிறப்பும் எவ்வளவு முக்கியமோ அது போல் இந்த மெனோபாஸும் முக்கியமானதொரு நிகழ்வுன்னே சொல்லலாம்..இது சும்மா ஒரு நாள் திடீர்னு நின்னுடாது..ஆறுமாசமோ அல்லது ஒரு வருஷமோ அல்லது சில வருஷங்களோ அவளப் பாடாப் படுத்திவிட்டு தான் அவ உடம்பை விட்டு செல்லும்..

அவளோட ஓவரியில் ஹார்மோன்கள் உற்பத்தி குறைவதாலோ அல்லது தீர்ந்து போவதாலோ ஏற்படும் பிரச்சனைகளால் இந்த பருவத்தில் அந்த பெண்மனி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப் படுகிறாள்..

ஹாட் ஃப்லஷ்…: உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வெப்பம் பரவுதல் போல ஒரு உணர்வு..எவ்ளோ அவஸ்தை…!..இது நார்மல் சிம்படம் தான் ஐஸ் வெச்சுக்கோங்க கோல்ட் க்ரீம் தடவுங்கன்னு எளிதா டாக்டர்
அறிவுரை சொல்லிடுவாரு..ஆனா அவங்க அனுபவிக்கும் வலி கொடூரமானது.. வேலைக்கு சென்றும்,வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டும் இந்த வலியைக் கடந்து செல்கிறார்கள் பல பெண்கள்..
வியர்வை : கண்ணா பின்னான்னு வியர்த்து கொட்டும்..A/C ஆஃபிஸ் ல உட்கார்ந்து வேலை செய்யும் போதும் வியர்த்துக் கொட்டும்.. நாலு பேர் வந்து போற ஆஃபிஸ் ல இப்படி வியர்த்துக் கொட்டினால் அவங்களுக்கு எவ்ளோ மன உளைச்சலா இருக்கும்? ..!

மாதவிடாய் காலம் முன்னும் பின்னும் சரியாக மதிப்பிட முடியாமல் கண்ட நேரத்தில் கொட்டி தீர்க்கும்..சில பெண்கள் பிரசவ வலியை விட கொடுமையான வலியை அனுபவிப்பார்கள்..அதீத ரத்தப் போக்கு.. யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.
இந்த அவஸ்தைகளை புரிந்து கொள்ளாமல் கணவனும் குடும்பத்தாரும் அவளிடம் எதிர்பார்க்கும் போது அவள் இன்னும் கோபத்திற்கு ஆளாகி தாறு மாறாக பேசுகிறாள் நடந்து கொள்கிறாள் இயலாமையில் எரிஞ்சு விழுகிறாள்..காரணமே இல்லாமல் அழுகிறாள்..

மேலும் மாதவிடாய் நிற்பதை தன் இளமையே போய் விடுகிறது..தான் இனி எதற்கும் பிரயோசனம் இல்லை,தாம்பத்ய இன்பத்தை தன் கணவனுக்கு தன்னால தர முடியாது என்ற தவறான மனக் குழப்பத்தில் தன்னம்பிக்கை இழக்கிறாள்..இந்த கால கட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் பிரிந்த தம்பதியர் கூட உண்டு.. இந்த நேரத்தில் அந்தத் பெண்மனிக்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை..’

.இந்த காலகட்டம் எப்பேற்பட்ட தெளிவான ஆட்களையும் ஆட்டி படைக்கும் கால கட்டம்.

பிரச்சனையை முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

ஆக இங்குள்ள அனைத்து ஆண் தோழமைகளையும் தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்..
MENstruation காலகட்டம் முடிந்து
MENopause கால கட்டத்தை சிறப்பாகக் கடக்க
MENtal Strength தந்து உங்க வீட்டு பெண்மணிகளை
அன்போடும்
ஆதரவோடும்
கனிவான பேச்சாலும்
அரவணைத்து உதவுங்கள்

பாகம் -2 இல் (Wo)menopause.. Women, to pass this stage with prior precautions..

மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ!

மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

                          nov 6 -= tec isro

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் கூறும்போது ‘மங்கள்யான்’ விண்கலம்,அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில், 2 மணி நேர இடைவெளியில் புதுப்புது தகவல்கள் பதிவு செய்யப்படும். ஃபோட்டோக்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும் என்றார். பொதுமக்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூரவ் இணையதளமான www.isro.gov.in – வாயிலாக மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என்றார்.


லிங்க் ::https://www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top