
குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம். சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள். டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட...