
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும். முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம். முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம். எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்...