.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 21 November 2013

ஹீரோக்களிடம் பரவும் வினோத போட்டி!


ஆக்ஷன் படம், மசாலா படம், காமெடி படம் என்று விதவிதமாக தங்கள் கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டு நடிக்கும் ஹீரோக்கள் இப்போது போட்டிபோட்டு தாடி வளர்த்து நடிக்கின்றனர். சிங்கம் படத்துக்கு மீசை வைத்து நடித்த சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தாடி வளர்த்துள்ளார்.

ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் அலைபாயுதே மாதவன் தாடியும், மீசையுமாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். புதிய படமொன்றுக்காக அருவா மீசையுடன் சுற்றிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி அப்படம் டிராப் ஆனதையடுத்து புதிய படத்துக்காக தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சூது கவ்வும் படத்தில் இவர் தாடி வளர்த்து நடித்திருக்கிறார். திரு இயக்கத்தில் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்காக விஷால் தாடி வளர்த்து வருகிறார்.

பட்டதாரி வாலிபன் படத்தில் நடிக்கும் தனுஷ் இப்படத்துக்கும், தொடர்ந்து நடிக்க உள்ள கே.வி.ஆனந்த் படத்துக்கும் தாடி வளர்க்கிறார். இளம் நடிகர்கள்தான் இப்படி என்றால் கோச்சடையான் படத்தில் நடிக்கும் ரஜினியும், விஸ்வரூபம்  2 படத்தில் நடிக்கும் கமலும் தாடி வைத்து நடிக்கின்றனர். ஹீரோக்கள் போட்டி போட்டுக்கொண்டு தாடி வளர்ப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்!

 nov 21 - ravi heart

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் “மார்ஃபான் சின்ட்ரோம்” (Marfan Syndrome) என்பதாகும்.

மார்ஃபான் சின்ட்ரோம் என்றால் என்ன?இதயம் ரத்ததை பம்ப் செய்யும் முக்கிய வெஸல் அஒர்டா (Aorta) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த அஒர்டாவின் வேலை ரத்தம் கொண்டு செல்ல விரிந்து தேவையான ரத்ததை ஒவ்வொரு பகுதிக்கு எடுத்து செல்லும் முக்கிய குழாய். இந்த மார்ஃபன் சின்ட்ரோம் வந்தால் இந்த அஒர்டா விரியாமல் ரத்த அழுத்தம் அதிகமாகி வெடிக்கும் நிலை உண்டு. அப்படி வெடித்தால் ரத்தம் மற்ற பாகங்களுக்கு செல்லாமல் உடனே மரணிக்கும் ஒரு அபாயம் உண்டு.

இவருக்கும் தன் இளவயது முதல் தெரியும் என்றாவது ஒரு நாள் இந்த அஒர்டா ரத்த குழாய் வெடிக்கும் என. ரொம்பவும் ஒரு நாள் ரொம்ப முடியாமல் போக டாக்டரிடம் சென்றவுடன் அவருக்கு வழக்கமாக செய்யபடும் அறுவை சிக்கிச்சை மூலம் அந்த ரத்த குழாயை வெட்டி எடுத்து ஒரு உலோக செயற்கை குழாயை பொருத்துலாம் அதன் பிறகு ரத்ததை மெலிதாக்கும் மருந்துகள் சாப்பிட்டால் ஓரளவு நிவாரணமும் இது தான் இந்த நோய்க்கு தீர்வு என குறிப்பிட்டுள்ளனர் ராயல் பிராம்ன்டன் லண்டன் மருத்துவமனை.

ஆனால் இவருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏன் என்றால் அது மிகவும் வலியை தரும் கடும் அறுவை சிகிச்சை மற்றும் அந்த ரத்ததை மெலிதாக்கும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றாவது ஒரு சிறு கீரல் உடம்பில் விழுந்தால் கூட குபு குபு என ரத்தம் வெளியேறி இறக்கும் அபாயம் உண்டு. அதனால் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு வீட்டுக்கு வந்து யோசனை செய்கையில் தன் தோட்டத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சும்போது அந்த தண்ணீர் பைப் டேமேஜ் ஆகி அதற்க்கு செலஃபன் டேப் ஒட்டு போட்ட விஷயம் நினைவில் வந்தவுடன் நேராக சில பொருட்களை தானே வாங்கி ஒரு சிறிய கருவியை செய்து, இதை எனக்கு பொருத்துங்கள் சரியாகிவிடும் என ம்ருத்துவ்ர்களிடம் தெரிவிக்க அவர்களும் உனக்கென்ன தெரியும் நாங்க டாக்டர் என சொல்லாமல் அதை ஆராய்ந்து அவருக்கு மிக சிறிய பேசிக் அறுவை சிகிச்சை மூலம் இதை செய்து இந்த மனிதன் இப்போது பல ஆண்டுகளாய் சாதாரணமாய் இருக்கிறார்

அதுமட்டுமல்ல இதை போல மேலும் 40 பேருக்கும் இதே டெக்னாலஜியை பொருத்தி அவர்களும் நன்றாய் உள்ளனர். இவர் அடுத்து பிரிட்டிஷ் கார்ட் ஃபவுன்டேஷனிலும் – ஜர்னலிலும் இதை இன்னும் அனைத்து உலகத்தில் உள்ள மார்ஃபன் சின்ட்ரோம் நோயாளிகளுக்கு இந்த எளிய அறுவை சிகிச்சையை செய்யுமாறு ரெக்வெஸ்ட் அனுப்பியுள்ளாராம்.

இந்த புதிய செயல்முறை என்ன? அதாவது அஒர்டாவை வெட்டி நடுவில் குழாயை பதிப்பதற்க்கு பதலாய் அஒர்டா குழாயை சுற்றீ ஒரு வழக்கமாய் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து மெடிக்கல் மெஷ் எனப்படும் ஒரு மெல்லிய மெட்டிரியலை அந்த குழாயை சுற்றீ தைத்துவிடுவதால் அந்த குழாய் பெரிதாகி வெடிக்கும் அபாயம் இல்லையாம். இதனை செய்து முடிக்க 3 ஆண்டுகள் வரை டாக்டர்கள் இவரின் ஒத்துழைப்போடு ஆராய்ச்சி செய்து இதுக்கு காம்பிளக்ஸ் சர்ஜரி தேவையில்லை சிம்பிளாய் செய்தால் போதுமானது என்று உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

 nov 21 - tec

டச்ஸ்கிரீன் எனப்படும் கொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய பல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்துள்ளார்.

இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக் காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில் இந்த பிரச்சினை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருநதது.

பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயே தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது.எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.

இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம் தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கல் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருநதார்கள்.குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால் அது அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருநதார்கள்.

இரண்டு வயது குழந்தையின் பார்வையில் இந்த தொடு திரை கணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்து
 இந்த தொடுதிரைகளுடன் அதிகம் பழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறியிருந்தார். இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புக்களுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்தத்துடன் தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றது இந்த ஆய்வு.

அதே சமயம் ‘திரைகள் கற்றலை பாதிக்கின்றன’ ஆனால் இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸமாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

இந்நிலையில்தான் குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய யல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்துள்ளார்

அதே சமயம் இந்த வாதத்தை மறுக்கும் சில ஆய்வாளர்கள் பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.முதலாவது சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை அதாவது தொலைக்கட்சி கணினி, தொடுதிரை கணினி என்று எல்ல வகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது என்பது முதல் யோசனை.

இரண்டாவது தொடுதிரை கணினியில் இருக்கும் விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை கணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பது முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கப்பட முடியாத அங்கமாக மாறி வருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

உலக ஹலோ தினம் = இன்று

 nov 21 - world hello

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு..
அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ ..

இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம் ..
ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று..

ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக சோறு தந்து பாசத்தை உணவில் ஊட்டி வளர்த்த அம்மா ..இன்று பாட்டியாக மாறிய பின், அதே வீட்டில், அதே குடும்பத்தில் நான்கு அடுப்பில் தனித்தனி சமையல் ..ஒரு பாயில் உறங்கிய ,ஒருதாய் வயிற்று பிள்ளைகள் இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரமின்றி , அடுத்த தேசத்து விரோதிகளாய் அண்ணன் தம்பிகளை பார்க்கும் கொடுமை ..

இப்படி… நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..

“ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்..

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசிகர ஓசை ..

இப்படி “ஹலோ’ என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து “ஹலோ’ வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.இந்நிலையில் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம்,

இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

 

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது.

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top