.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 24 November 2013

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்!

 

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.

ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

Saturday, 23 November 2013

அஜித்தின் 'வீரம்' எக்ஸ்க்ளூசிவ் !

 

வருகிற பொங்கலுக்கு அஜித்தின் 'வீரம்'  ரசிகர்களுக்குப் பெரிய பொங்கல் விருந்து.

வீரத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் உங்களுக்காக:

*அஜித் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் . வில்லேஜ் கதையில் அவ்வளவு பொருத்தமாக அஜித் பின்னி எடுத்திருக்கிறார்.

*எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' மாதிரியும், ரஜினியின் 'முரட்டுக்காளை' மாதிரியும் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்ஷன் படம்.

*படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.அஜித்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.

*சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜித் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்புப் பொங்கல்தான். முதன் முறையாக அஜித் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம்.

*நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

*கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும்.

*தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டையக் கிளப்பும்.

*படத்தில் நோ பன்ச் டயலாக். ஆனால்,  காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ச் டயலாக் எஃபெக்ட் இருக்கும்.

*ஷூட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், கலர் கரெக்ஷன், டப்பிங், எட்டிட்டிங் என வீரத்துக்கு அழகு சேர்க்கும் பணிகள் வேகமா நடந்துக்கிட்டிருக்கு.

*சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலான்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு.

தல வைக்கும் பொங்கல் விருந்தை சாப்பிடத் தயாராகிட்டீங்களா?

ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?

 

திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.

எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.

எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

 
 கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது.

இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.  அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, 4-ஆம் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.

எனினும் கோயில் 24-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

வினோத நம்பிக்கைகள்!

மாமியார்-மருமகள் கல்! : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது.

 ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!


அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!
 
திருடர்கள் கோயில் :

 ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

அணையா தீபம் :

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் (இந்த ஆண்டு - அக்டோபர் 5) கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! :

கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வாடா மலர்கள் :

ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் திறப்பு!


 ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த சமயங்களில் கோயிலில் பெருங்கூட்டம் காணப்படுவதால் சிறப்பு தரிசனம் செய்ய 250 ரூபாய்க்கு தனி வழி பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. எப்படி அடைவது? ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.

பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை :

21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30

ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை :


11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30

மூன்று விஷயங்கள்.....

மூன்று விஷயங்கள்.....

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
 இறப்பு
 வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
 மனைவி
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
 கல்வி
 நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
 கடமை
 இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
 வாயிலிருந்து சொல்
 உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
தாய்
 தந்தை
 இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
சொத்து
 ஸ்திரி
 உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
தாய்
 தந்தை
 குரு

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top