.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 27 November 2013

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!




வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே

இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.

இதில் அதிக செலவு வைக்கும் பொருட்களும் இல்லை – அதே சமயம் லைட் கார்பன் பாடியில செஞ்ச இது அனேகமா 5 லட்சத்துக்குள்ளத்தான் ஆகும்னு நல்ல தெரிஞ்சவங்க சொல்றாங்க என்ன ஹாட்டு மேட்டர் தானே….. இந்த வீடியோக்களை  பாருங்க…..

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

ஆர்யாவுக்கு ஜோடியான ஸ்ருதி!


'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.

 ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு  விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

அன்புக்கு நான் அடிமை - கவிதை!


அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்

 உலகில் எதுவுமே...இல்லை...!

மிருகத்தை மனிதன்

 மிருகமாக பார்க்கிறான்....

மனிதனை மிருகங்கள்...

பல நேரம்...

அன்பாகவே பார்க்கின்றது...!

எந்த உயிரினமும்...

தன்னிடம் அன்பு காட்டும் வரை..

அன்பையையே ..

அதுவும் வெளிப்படுத்துகிறது...!

 

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

nov 27 -wikki _AWARD_photo

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.


விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.


 இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.

1. விக்சனரி:

நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம்.

நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.

இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.

இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2. விக்கியினங்கள்

இந்த தளத்திற்கு செல்ல

 -http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.



3. விக்கி நூல்கள்

விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.

தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 

4. விக்கிமேற்கோள் (Quotes)

அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.

இதற்கான தளத்திற்கு செல்ல

:http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top