.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 29 November 2013

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.

அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான்.

அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.

ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.

வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.

இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள்.

வாழ்ந்து பாருங்கள்.

உறவு முறை பழமொழிகள்!



அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது

 தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி

 அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார்

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு

 அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.

மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்

 கணவன்; புல்லானாலும் புருஷன்

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

 பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார்

 மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார்

 பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்

 மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?

உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.

நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!

சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல;

சீரகம் இட்டு ஆட்டாத கறியும் கறியல்ல.

நகைச்சுவை!


 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".


தமிழர்களின் கற்பனை மிருகமான

"யாளி".

இவை தென்னிந்திய கோவில்

 சிற்பங்களில் மட்டும் காணக்

 கிடைக்கும். கோயில் கோபுரங்கள்,

மண்டப தூண்களில்

இதனை காணலாம். சிங்க முகமும்

 அதனுடன் யானையின் துதிக்கையும்

 சேர்ந்தார் போல் காட்சி தருவதைப்

 போன்று பல கோவில்களில்

 இவற்றின் சிலைகள்

 அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின்

 தலை கொண்டதை " சிம்ம யாளி "

என்றும், ஆட்டுத்தலை கொண்டதை "

மகர யாளி " என்றும்,

யானை முகத்தை "யானை யாளி "

என்றும் அழைக்கிறார்கள்.

வேண்டியவை மூன்று எவை?



 * இருக்க வேண்டியது மூன்று தூய்மை, நீதி, நேர்மை


* அடக்க வேண்டிய மூன்று நாக்கு, நடத்தை, கோபம்


* பெற வேண்டிய மூன்று தைரியம், அன்பு, மென்மை


* கொடுக்க வேண்டிய மூன்று ஈதல், ஆறுதல், பாராட்டு


 * அடைய வேண்டிய மூன்று ஆன்மசுத்தம், முனைவு, மகிழ்வு


* தவிர்க்க வேண்டிய மூன்று இன்னா செய்தல், முரட்டுத்தனம்,

நன்றியில்லாமை


* நேசிக்க வேண்டிய மூன்று அறிவு, கற்பு, மாசின்மை

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top