.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 December 2013

பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் தளத்தின் புதிய தொழில்நுட்பம்!

 ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும்பிரபலமான  நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதியயுக்தி ஒன்றினை கையாள  முற்பட்டுள்ளது.இதன்படி கொள்வனவு செய்யப்படும் பொருட்களை குறித்த  வாடிக்கையாளருக்கு டெலிவரி  செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter)எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது. இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன் 60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது. இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான்தனது புதிய  சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது....

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

 முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங் ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது. இதேவேளை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 3 ஆனது 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Samsung Galaxy S5 ஆனது 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்...

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

 'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம். கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். 'பிரியாணி'...

கேழ்வரகு தோசை - சமையல்!

  தேவையானவை: கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும். இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோ...

அமைதியான மனம் பெற இதோ சில வழி முறைகள் ...

கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.மறக்கவும்... மன்னிக்கவும்...இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன்...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top