.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 10 December 2013

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!


-
“நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்
 சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”
-
அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு
 கேலி பண்ணுவாங்கடா…!!
-



-
“தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா
“யாரு   இவர்?”
-
டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!
-


-
நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம
 விட்டு வெச்சிருக்கே?”
-
“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”
-


-
“நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு
 பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி
 கேட்டாங்க?”
-
“ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!





” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா
 போச்சா…ஏண்டி?
-
” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்
 செஞ்சு தொலைச்சிட்டேன்…!!

முஸ்லிம் இளவரசியாக அனுஷ்கா!





அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' படங்களில் நடித்து வருகிறார்.


இந்தப் படங்களுக்காக பழங்கால சண்டைப் பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திரக் கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


அப்படி சில கதைகளை கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும 'பாகுபாலி'யை முடித்ததும், 16ம் நூற்றாண்டு கதை ஒன்றில் நடிக்கிறார்.


கோல்கொண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த முகமது ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லிம் மன்னனின் மனைவியைப்பற்றிய கதையில் அப்படம் உருவாகிறது.


'பாஹ்மதி' என்று பெயர் வைத்திருக்கும் அப்படத்துக்காக முஸ்லிம் இளவரசியாக மாறுகிறார் அனுஷ்கா.

அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!




அஜித்தின் 'வீரம்' படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின்  தயாரிப்பாளர்கள்.


எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது? இதுதான் அவர்கள் கேட்கிற கேள்வி.


படத்தை வெளியிடுவதும், எத்தனை தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்பதும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் நமக்கென்ன பிரச்சனை என்று அமைதிகாக்க ஆரம்பித்துவிட்டார் அஜித்.


'வீரம்' படத்திற்கு 1800 தியேட்டர்கள் என்றால் ஜில்லாவுக்கு? விஜய்க்கு நெருக்கமானவர்கள்.இப்படியொரு கேள்வியை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .


ஒரு நாளுக்கு மட்டும்தான் இந்த 1800. ஒரு நாள் தள்ளி வெளியிடப்படும் 'ஜில்லா'வுக்கு அதில் பாதியை ஒதுக்கித் தந்துவிடுவார்களாம். கேட்டால் இதுவும் பெரிய பட்ஜெட் படமாச்சே என்கிறார்கள்.

ஆலு வெந்தயக்கீரை தோசை - சமையல்!







தேவையானவை:


தோசைக்கான மாவுக்கு:


 இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப்,

 உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன்,

 உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு.


உருளைக்கிழங்கு மசாலுக்கு:


சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ,

தக்காளி - 1,

வெங்காயத் தாள் - 1 செடி,

பெரிய வெங்காயம் - 1,

வெந்தயக்கீரை - 1 கட்டு,

 மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்,

தூள் உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - 6 டீஸ்பூன்,

வெண்ணெய் - 1 பாக்கெட்.


செய்முறை:


இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).



உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும்.


 வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.


பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.


வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.

வெல்ல தோசை - சமையல்!




தேவையானவை:


கோதுமை மாவு - 2 கப்,


வெல்லம் (பொடித்தது) - 1 கப்,


பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்),


தேங்காய் (துருவியது) - கால் மூடி,


ஏலக்காய் - 4,


எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


 ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.


 பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.


தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top