.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 December 2013

வெளி நாட்டு வாழ்க்கை....



வெளி நாட்டு வாழ்க்கை....


தெரியாத ஊர்...

அறியாதமொழி...

புதிதான சூழல்...

புரியாத சுற்றம்...

அனைத்தும் தாண்டி நாம்

 அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

முதலில்

 வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்

 தகுதியானவர்கள் இல்லை

 பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்

 தகுதியானவர்கள்...

இங்கே

 முடிந்தால் சாப்பிடுவோமே தவிர

 மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...

முடிவெட்டினால் கூட

 ஒட்ட வெட்டுவோமே தவிர

 ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

இது

 எங்களின் கஞ்சதனமில்லை

 நான் அசிங்கமானாலும் பரவாயில்லை

 என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற

 அபூர்வ குணமே....

அது போல

 வெளிநாட்டு வாழ்க்கை

 சில பிரிவை தந்தாலும்

 பொருத்துக்கொள்வோம்

 ஏனென்றால் அதுதானே

 நமக்கு பிழைப்பையும்

 தந்திருக்கிறது.

விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள் !







சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர்.


மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை.


எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர். அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன.


இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

உண்மை வரிகள்.....?



உண்மை வரிகள்.....


1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !


2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..


3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?


4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு..


5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.


6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..


7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் அமெரிக்காவால் .


8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல.

Tuesday, 17 December 2013

குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?




குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.


கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.


சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.


ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.


பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.


ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.


பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.


வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.

ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? உப்பை வெச்சு துவைங்க....!




நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?


முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

* புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

* உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

* ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

* உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

* அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

* எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.

ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை. மேலும் வேறு எப்படியெல்லாம் ஜீன்ஸை துவைக்கலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top