.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 December 2013

வெற்றி ....?



“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..?




பதில்:

யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

மூச்சைப் பிடித்துக் கொள்வது,

தலையில் நிற்பது,

இவையெல்லாம் யோகா அல்ல.


யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

அதாவது

உடல்,

மனம்

இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

மற்றும்,

யோகா என்றால்,

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,

நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,

நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,

நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி இருந்தால் அதுதான் யோகா.

எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

கேள்வி..

யோகா என்பது எல்லோருக்குமானதா..?

இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?



நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான்.

ஏனென்றால்,

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை,

அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,

உணர்ச்சியின் மூலமாகவோ,

தங்கள் உடலின் மூலமாகவோ,

தங்களின் சக்தியின் மூலமாகவோ,

ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.

மற்றும்,

மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.

கேள்வி...

பிராணாயம் என்றால்..?


மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.

கேள்வி...

தியானம்.....?


ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து
உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்ச்சியே தியானம் ஆகும்.

மனைவி பாராட்ட வேண்டுமா?



குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும்.

தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

• மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள்.

• வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள்

• ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள்

• மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள்

• உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு அவரிடம் விவாதியுங்கள்

• அவர் தனது பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார காது கொடுத்து கேளுங்கள்

• வருங்காலத்துக்கு ஒரளவு பணம் சேமித்து வைக்க பாருங்கள்

• குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதாநேரமும் உங்களுக்கு இருக்கட்டும்

• பயணங்களால் மனைவியைப் பிரியும்போதும் வீட்டுக்குள் வரும் போதும் முத்தமிடுங்கள் அல்லது புன்னகையாவது பூத்தல் அவசியம்

 இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் மனைவி உங்களை ஆஹா...ஓஹோ என புகழ்வது உறுதி.

வரலாற்று குறிப்பில் இருந்து...



நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார்.


காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.


 "அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அம்பேத்கர் பதில் கூறினார்.

வெளி நாட்டு வாழ்க்கை....



வெளி நாட்டு வாழ்க்கை....


தெரியாத ஊர்...

அறியாதமொழி...

புதிதான சூழல்...

புரியாத சுற்றம்...

அனைத்தும் தாண்டி நாம்

 அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

முதலில்

 வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்

 தகுதியானவர்கள் இல்லை

 பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்

 தகுதியானவர்கள்...

இங்கே

 முடிந்தால் சாப்பிடுவோமே தவிர

 மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...

முடிவெட்டினால் கூட

 ஒட்ட வெட்டுவோமே தவிர

 ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

இது

 எங்களின் கஞ்சதனமில்லை

 நான் அசிங்கமானாலும் பரவாயில்லை

 என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற

 அபூர்வ குணமே....

அது போல

 வெளிநாட்டு வாழ்க்கை

 சில பிரிவை தந்தாலும்

 பொருத்துக்கொள்வோம்

 ஏனென்றால் அதுதானே

 நமக்கு பிழைப்பையும்

 தந்திருக்கிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top