.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 December 2013

லெனோவா வைப் எக்ஸ் ரூ.25.999 விலையில் அறிமுகம்!




லெனோவா தனது முதல் வைப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.25.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா வைப் எக்ஸ் இந்த வாரத்திற்குப் பின் கடைகளில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனில் பிரீமியம் பாலிகார்பனேட் உடற்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்ட், லேசர் என்க்ரேவ்ட் (engraved) 3D டேக்டில் ஃபினிஸ் (tactile finish) கொண்டுள்ளது.

சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இது 121 கிராம் எடையுடையது. லெனோவா வைப் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. வைப் எக்ஸ் முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3, 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்சல் அடர்த்தி உள்ளது.

போனில் 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, ரேம் 2GB உள்ளது மற்றும் 16GB உள்ளடிக்கிய சேமிப்பு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் இயங்குகின்றது. லெனோவா வைப் எக்ஸ் எல்இடி ப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேடட்(back illuminated) சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப் எக்ஸ் 2,000 mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.  இது 144x74x6.9mm மெஷர்ஸ் உள்ளது.

லெனோவா வைப் எக்ஸ் முக்கிய குறிப்புகள்:

1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே,
440ppi பிக்சல் அடர்த்தி,
1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர்,
ரேம் 2GB,
16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா,
வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
Wi-Fi,
ப்ளூடூத்,
AGPS,
3G,
121 கிராம் எடை,
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்,
 2,000 mAh பேட்டரி.

நோக்கியா ஆஷா 502 இந்தியாவில் ரூ.5,739 விலையில் அறிமுகம்!




நோக்கியா நிறுவனம் தனது சமீபத்திய ஃபோனான ஆஷா 502 இந்திய சந்தையில் ரூ.5,739 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா ஆஷா 502 இப்பொழுது நோக்கியாவின் ஆன்லைன் கடைகளில் கடைக்கும். நோக்கியா ஆஷா 502, நோக்கியா ஆஷா ப்ளாட்ஃபார்ம் 1.1 அடிப்படையாக கொண்டுள்ளது மற்றும் ஃபெர்ம்வேர் over-the-air (FOTA) மேம்படுத்தல் ஆதரிக்கின்றது.


இது 240x320 (QVGA) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. ஆஷா 502 மட்டுமே நோக்கியா ஈசி ஸ்வாப் தொழில்நுட்பத்துடன் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) வேரியன்ட் வருகின்றது அத்துடன் இரட்டை காத்திருப்பு ஆதரிக்கின்றது. குறிப்பாக, வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக ஆஷா 502 ஃபோனில் மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.


இது 1010mAh பேட்டரியுடன் வருகிறது. இது 99.6x 59.5x11.1mm மெஷர்ஸ் மற்றும் 100 கிராம் எடையுடையது. நோக்கியா ஆஷா 502 எல்இடி ஃபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. இது microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு ஆதரவு கொண்டு வருகிறது.


நோக்கியா ஆஷா 502 முக்கிய குறிப்புகள்:


240x320 (QVGA) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே,

இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),

99.6x 59.5x11.1mm மெஷர்ஸ்,

100 கிராம் எடை,

எல்இடி ஃபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,

microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு,

1010mAh பேட்டரி.

கூகுளில் 2013-ல் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம்




2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் திரைக் கலைஞர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.


2013 கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலை அறிவித்திருக்கிறது. http://www.google.com/trends/topcharts இணையத்தில் யாரெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளலாம்.


TOP TRENDING பட்டியலில் முதல் இடத்தினை சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் பிடித்திருக்கிறது. TOP TRENDING என்பது கூகுள் இணையத்தில் அதிகமாக பேசி, விவாதிக்கப்பட்டது என்று அர்த்தமாகும். சென்னை எக்ஸ்பிரஸ், ஐபில் 2013, Aashiqui 2, க்ரிஷ் 3, பிக் பாஸ் 7, பால் வால்க்கர், ஜியா கான், ராம் லீலா ஆகியவை முதல் பத்து இடங்களை பிடித்திருக்கின்றன.


அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் படங்கள் பட்டியலில் Aashiqui 2, MOST SEARCHED பட்டியலில் IRCTC தளம், அதிகமாக தேடப்பட்ட செய்திகள் பிரிவில் "பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி", மக்களால் தேடப்பட்ட பிரிவில் சன்னி லியோன், மொபைல் போன் பிரிவில் SAMSUNG GALAXY S4, அரசியல்வாதிகள் பிரிவில் நரேந்திரா மோடி, விளையாட்டு வீரர்கள் பிரிவில் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முதல் இடத்தினை பிடித்திருக்கிறார்கள்.


அதிகமாக தேடப்பட்ட தென்னந்திய நடிகர்கள் பிரிவில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அஜித், ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.


கூகுள் இணையத்தில், விஜய் முதல் இடத்தை பிடித்திருப்பதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் #VijayTheMostSearchedSouthIndianActorInGoogle என்ற டேக்கை ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

இரயில் பயணத்தில்....... ?




ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து,

" அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

அதற்கு அந்த தந்தை சொன்னார்,

"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."


"ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

சாகித்ய அகாடெமி விருது பெறுகிறார் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்




2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார்.


எழுத்தாளர்களுக்கான உயரிய கவுரமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இந்த முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். பெங்காலி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.


தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.


2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top