.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 19 December 2013

மிருகங்களுக்கு உரிய குணம்...?



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது...குட்டிக்கதைகள்!



தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.

அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.

சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.

எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.

மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.

உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.

இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.

அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் என்று
3. குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் எதிரொலி என்று

 நீதி:


இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.

நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்.

வெளிநாடுகளில் ‘அனேகன்’




‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பினை அதிகமாக வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த்.தமிழ்த் திரையுலகில் வெளிநாட்டுக் கதைக்களங்களைக் தெரிவு செய்வது சமீபத்திய வழக்கமாகியுள்ளது.


ஜார்ஜியா, ஜப்பான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்தும் அந்த வரிசையில் தனது புதிய படத்தினை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.


இவரின் 'அனேகன்' திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடி போட்டுள்ளார் அமிரா.


இப்படத்தின் படப்பிடிப்பானது தெற்காசிய நாடுகளில் நடைபெற உள்ளது.


மேலும் மியான்மர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.


இந்தப் படத்தின் ஒளிப்பதிவு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இதுவரை சிறிய பகுதியினை மட்டும் படமாக்கியுள்ளனர்.

சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!



இன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி  கிரேண்ட் ஹோட்டலில் நடிகர் விஜய்  பத்திரிகையாளர்களை சந்தித்தார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார்.


சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்தார்.


மூன்று தயாரிப்பாளர்களுக்கும், இரண்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, 'ஜில்லா' இசையை வெளியிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்தபோது 'ஜில்லா' இயக்குநர் நேசனும், இசையமைப்பாளர் இமானும் அரங்கத்தில் இல்லை.


விஜய் மேடையேறியதும், நேசன், இமான் ஆகிய இருவரும் அரங்கத்துக்குள் வந்தனர்.


விஜய் 'ஜிலலா' இசையை வெளியிட, ஐந்து தயாரிப்பாளர்களும் பெற்றுக்கொண்டனர். 21ல் 'ஜில்லா' இசை வெளியிடப்படும் என அறிவித்துவிட்டு, திடீரென இசை வெளியீட்டை நிகழ்த்தியது ஏன்? என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!




குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top