.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை





சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!




'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய்.   

விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன்.

இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது.

விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ.

முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம்.

ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என இயக்குனரிடம் முன்பே சொல்லிவிட்டார் மோகன்லால்.

ஆனால் விஜய்யோ, மோகன்லாலின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, டைட்டிலில் மோகன்லால் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குனர் நேசன்.

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

மலையாளத்திலும் சந்தானம்





தமிழ் சினிமாவின் தற்போதைய நகைச்சுவை மன்னனாக வலம்வரும் நடிகர் சந்தானம் தற்பொழுது மலையாளத் திரையுலகிலும் நுழைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் சலாலா மொபைல்ஸ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்துவருவதாகக்
கூறப்படுகிறது. இப்படம் சந்தானம் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும். தமிழில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நாயகனாக வலம்வரும்
சந்தானம் மலையாளத்திலும் ஜொலிப்பாரா என்பது இப்படம் வெளியானபின்பு தெரியவரும்.

ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை சரத் ஏ.ஹரிதாசன் இயக்கிவருகிறார். நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

4000 தடவைகளுக்கும் மேலாக ஒலிபரப்பான பூமி என்ன சுத்துதே பாடல்




கொலவெறி புகழ் அனிருத் இசையில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இப்படத்தின் “பூமி என்ன சுத்துதே” பாடல் இவ்வாண்டில்
அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் ஹிட்டாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிகமுக்கியச் செய்தியாக “ பூமி என்ன சுத்துதே” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார். அனிருத் இப்பாடலைப் பாடியிருந்தார் என்பதே. இவர்களின் கூட்டணியில்தான் கடந்த வருடம் வெளியான “ ஒய் திஸ் கொலவெறி” பாடலும் உலகப் புகழ் பெற்றது நினைவிருக்கலாம்.

சென்னையில் உள்ள 7 பண்பலை வானொலி நிலையங்கள் மற்றும் கோவையில் உள்ள 4 பண்பலை வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தமாக இப்பாடல் சுமார் 4028 முறைகள் ஒலிபரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருகிற 2014 ஆம் ஆண்டும் அனிருத்திற்குச் சிறப்பான ஆண்டாக அமைய பிளஸ் மீடியா வாழ்த்துகிறது

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top