.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 30 December 2013

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்




2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.


இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 


முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே சொல்லுங்க, நாம வந்து கருத்து சொன்னா சரியா இருக்குமா? புதுசா ஒரு காதல் சொல்ல வர்றோம். துறுதுறுனு சுத்திக்கிட்டிருக்கிற வெகுளிப் பாப்பா ஹன்சிகாவை, எவ்ளோ தூரம் துரத்தி துரத்தி காதல் செய்றான் பீட்டர் (சிவா) அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். இந்தப் படத்துல மீசை இல்லாமல் நடிச்சிருக்கேன்.


அதுக்காக உடைகள், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் மாத்த கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்துல முழுக்க முழுக்க காமெடியெல்லாம் இருக்காது. கொஞ்சம் ஆக்‌ஷன். அள்ள அள்ள காதல் இருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட கதை. அவர் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். இளைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படம் காதல் உணர்வைக் கொடுக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலி விருந்து.


ஷூட்டிங்ல ஹன்சிகா என்ன சொல்றாங்க? 


கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னு எடுத்துக்கிட்டுதான் சொன்னாங்க. கதை முழுக்க ஹன்சிகா மாதிரி, ஹன்சிகா மாதிரின்னு பேசிவிட்டு அவங்க இல்லாமல் இருந்தால் எப்படின்னு யோசிச்சோம். தயாரிப்பு தரப்பில் அவங்ககிட்ட கதையைச் சொன்னாங்க. கிளைமேக்ஸ் வரைக்கும் அவங்க கேரக்டரோட முக்கியத்துவத்தை பார்த்துட்டு உடனே ஒப்புக்கொண்டாங்க.


ஷூட்டிங்குல ஹன்சிகா, பயங்கர துறுதுறு கேரக்டர். செம ஜாலிப் பேர்வழி. யாரையாவது வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க அமைதியா இருந்து பார்த்ததே இல்லை. அதுவும் இயக்குநர் திருக்குமரனை வம்புக்கு இழுக்கலைன்னா அவங்களுக்கு பொழுதே போகாது. அவர் என்கிட்ட வந்து ஹன்சிகா பத்தி புகார் கொடுப்பார். நம்ம சிக்கிடுவோமா நண்பா, சொல்லுங்க.

உங்க குழந்தை ஆராதனா எப்படி இருக்காங்க?

குட்டிப்பாப்பா சமத்தா அம்மாக்கூட விளையாடிக்கிட்டிருக்காங்க. பிறந்து 2 மாசம் ஆகுது. ஆனா நான் அவங்களோட இருந்தது ரொம்ப குறைச்சலான நாட்கள்தான். இப்பக்கூட அவளைப் பார்த்து 20 நாட்கள் ஆச்சு. அவங்க அம்மாதான் அவங்களுக்கு எல்லாம். அவளோட விளையாட்டு, தூக்கம், புன்னகைன்னு எல்லா விஷயங்களையும் நான் செல்போன் மூலமாதான் பார்த்துக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இந்த புத்தாண்டை என் ஆராதனாவுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறேன்.


 அதேபோல அவங்க எங்களுக்கு பரிசா கிடைச்சபெறகு முதலில் வெளிவரப்போற படம் ‘மான் கராத்தே’. படம் ரிலீஸப்போ அவங்க 6 மாதக் கைக்குழந்தையா இருப்பாங்க. முதன்முதலா அப்போ அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கேன். திரையில வர்ற என்னை பார்த்துட்டு அவங்க எப்படி பாவனை காட்டப்போறாங்கன்ற எதிர்பார்ப்பு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.


உங்க தலையில் இருந்த தொகுப்பாளர் கிரீடத்தை தூக்கி மா.கா.பா ஆனந்த் தலையில் வச்சீங்க. இப்போ அவரும் உங்களை பின் தொடர்ந்து சினிமாவுக்கு வந்துட்டாரே?


இதுதானே வேணும். அங்கிருந்து சினிமாவுக்கு வர முடியாதுங்கிற நிலையை உடைச்சிருக்கீங்கன்னு என்கிட்ட நண்பர்கள் சொல்வாங்க. அது தொடர்ந்து நடந்தா சந்தோஷம். இனிமேல் தொலைக்காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும். அதுவேற இதுவேறதான். சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் மட்டும்தான் வரமுடியுது.


மா.கா.பா அப்படித்தான். நிறைய உழைப்பார். அதேபோல தொடர்ந்து எல்லாருமே வர்றது நல்ல விஷயம். இங்கே வந்துட்டோம் ஜெயிச்சிட்டோம் என்பதெல்லாம் எனக்கு இல்லை. சரியான ஆரம்பம் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாதுகாப்பானதா தொடர்ந்து கொண்டுப்போகப் போகிறேன் என்பதில்தான் எல்லாம் இருக்கு. ம்ம்ம்… பார்க்கலாம்.

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?





இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள்
அதிகம்..?

 

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.



02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.



03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.



04. 1835 ல் அவரது காதலி மரணம்.



05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.



06. 1838 ல் தேர்தலில் தோல்வி.



07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.



08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.




09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.



10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.



11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.



12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.



இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
வேறுயாருமில்லை...



உலகம் அறிந்த மிகவும் பிரபலமான
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.



அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
இவையே வெற்றியின் இரகசியம்...!!

பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில்!




ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி டைரக்ட் செய்துள்ள படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அமலாபால் ஹீரோயின். நீ திருந்து உலகம் தானாக தன்னை திருத்திக் கொள்ளும் என்ற மெசேஜை கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.


 2013ல் ஆதிபகவன் கொடுத்த அடியில் துவண்டு போயிருக்கும் ஜெயம் ரவி இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிமிர்ந்துநில் படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. வருகிற 14ந் தேதி திரையிடப்படுகிறது.



இதுகுறித்து ஜெயம்ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரசிகர்களுக்கும், சக நடிகர் நடிகையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிமிர்ந்து நில் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.


அது பெர்லின் திரைப்பட விழாவுக்கு தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் தரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது. மேலும் நல்ல செய்திகள் இந்த ஆண்டு வரும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வாழ்க்கை கொடுத்த குருவை மறந்த சிஷ்யன்;அடி முட்டாள் என திட்டிய குரு..?




சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் ஆடியோ ரிலீஸ் நடந்தது.


இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய காமெடியன், விழாவுக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், பாரதிராஜா, கேயார், விக்ரமன் ஆகியோரை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டு தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் பற்றி பேச மறந்து விட்டார். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசினார்.


இதைத் தொடர்ந்து பேச வந்த பாலச்சந்தர் கூறியதாவது:


செகரட்டரியேட்ல கிளர்க்கா வேலை பார்த்துகிட்டு இருந்தவன் சின்ன சின்ன கவிதை எழுதிக் கொண்டு வந்து என்கிட்ட காட்டி வாய்ப்பு கேட்டான். நானும் தொடர்ந்து அவனுக்கு மூன்று படத்துல வாய்ப்பு கொடுத்தேன். முதல் படத்துலேயே தன்னை அறிவாளியா காட்டிக்கிட்டுதான் நடிச்சான். ஆனா நான் அவனை அப்போதே முட்டாள்னுதான் திட்டுவேன்.


 இப்போ என் பெயரை மறந்துட்டு தான் அடிமுட்டாள்னு புரூப் பண்ணிட்டான். என்றார்.


இந்தப் படத்திற்கு வெங்கட் க்ருஷி என்பவர் இசை அமைத்திருந்தார். ஆனால் அவரை மேடைக்கு அழைக்கவே இல்லை. அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட யாரும் பேசவில்லை. பாரதிராஜா மட்டும் பெயரை குறிப்பிட்டு ஹாட்ஸ் ஆப் யூ என்றார்.

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top