
காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அதோடு, அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும், பின்னாடியே தானும் பறந்து விடுவார்.அப்படிப்பட்ட சிம்பு இப்போது இரண்டாம் கட்டமாக ஹன்சிகா மீது காதல் தொடுத்திருக்கிறார். இந்தமுறையும் அவரது காதல் ரொம்ப உறுதியாக இருக்கிறது. அதனால் முதல் காதலுக்கு எந்த குறைவும் இல்லாமல் இந்த முறையும் ஹன்சிகாவை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்கா விட்டாலும் துடித்துப்போகிறாராம்.ஆனால்,...