இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.
ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.
அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.
டயாஸ்போரா (Diaspora)
நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை விட ஒரு பாதுகாப்பான, மற்றும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிறோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும் என அறிவித்தனர். ஆனால் அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் $200,600 தொகையை 6450 பேர் சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே கொடுத்தனர். இப்போது Diaspora மென்பொருள் இலவசமாக கிடைகிறது., உங்கள் கல்வி, வணிக, அல்லது மக்கள் குழுவிற்காக முக நூலைப் போல ஒரு சமூக வலைதலம் வேண்டும் என்றால் இதை நிறுவி இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஸ்நாப் சாட் (Snap Chat)
இதன் செயல்பாடு மிக மிக எளிமையானது. நீங்கள் உங்கள் கைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்து உங்களின் விருப்பமானவருக்கு அனுப்பினால், அவர் அந்தப் படத்தை பார்த்து முடித்த சில வினாடிகளில் அழிந்து விடும். இந்த Snap Chat மென்பொருள் இளையோர் மத்தியில் முகநூலை விட மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. TechTamil கார்த்திக் இப்படிதான் ஏதாவது சொல்லுவான் என நீங்கள் நினைத்தால், இதை படித்துப் பாருங்கள். முகநூல் முதலாளி மார்க் Snap Chat நிறுவனத்தை $3 பில்லியன் டாலருக்கு (18,600கோடி ரூபாய் ) விலை பேசினார். ஆனால் Snap Chat நிறுவனம் உங்கள் பணம் தேவையில்லை என அந்த பேரத்தை நிராகரித்தனர்.
கன்பைடு (Confide)
நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களை படித்து முடித்தவுடன் அவரிடம் கேட்காமலேயே அழித்துவிடும் மென்பொருள் இது. புதிகாக வந்துள்ள இந்த மென் பொருள் snap chat அளவிற்கு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.



04:40
ram





