.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 8 October 2014

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!

உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன. தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. வீடியோ கேம் முன்பு உட்கார்ந்து வீணாகும் நேரம்பற்றி கவலைப்படாமலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தெரியாமலும் குழந்தைகள் உட்கார்ந்து இருக்கிறார்கள். குழந்தை நன்றாக சாப்பிடுவதும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் தான் பெற்றோரின் கடமை என்று நினைக்கிறார்கள். குழந்தையை...

Tuesday, 7 October 2014

6 பேக் நல்லதா கெட்டதா?

சமீப காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யா,  பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில் நடித்தனர். படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்டு வருவதற்காக நாள் ஒன்றுக்கு 15 நேரம் பயிற்சி எடுத்து கொண்டார் என்பது போன்ற விளம்பரங்களும் வருவதுண்டு. இந்த சிக்ஸ் பேக் தீ, தற்போது இன்றைய இளைஞர்களிடம் பரவி உள்ளது. அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும்...

மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்!

உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்று தான் மஞ்சள். மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மஞ்சள் பால் செய்முறை: 1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும். சுவாசக் கோளாறு மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை...

Saturday, 4 October 2014

உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும். இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்... சிறுநீர் அடிமை கேர்ரி என்பவருக்கு...

Thursday, 2 October 2014

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம். இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்" பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும். இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்: பச்சை - இயற்கை நீளம் - இயற்கை + மருத்துவ குணம் சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை கருப்பு - சுத்தமான ரசாயன கலவை உண்மை என்ன? இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top