.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 9 October 2014

வெந்தவன், வேகாதவன், அர வேக்காடு.....?

தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க.  அதுல ஒரு படம்தான் இது.  இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி வருவாய்ங்களோ). மூன்று ஹீரோயின் இருக்குறப்போ மூன்று ஹீரோ இருந்தாகணுமே இருக்காங்க. ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் மியூசிக் பண்றார். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது. மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம். அந்த குணத்தைத்தான் டைட்டில் குறிப்ப...

ஸ்பெஷல் புளூடூத் மவுஸ்...!!

லாஜிடெக் நிறுவனம், தான் வடிவமைக்கும் மவுஸ்களுக்குப் புகழ் பெற்றது. தொடக்கத்திலிருந்து இந்த புகழை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அண்மையில் Logitech Ultrathin Touch Mouse T630 என்ற பெயரில் புதிய மவுஸ் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயரைக்கேற்ற வகையில், இது மிக மிகக் குறைவான தடிமனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. லாஜிடெக் நிறுவனத்தின் இணைய தளத்தில் இதன் அமெரிக்க விலை 70 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிக எளிதாக இதனைப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புளுடூத் வழியே இது செயல்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், இரண்டு புளுடூத் சேனல்கள் தரப்பட்டுள்ளன.  இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கீழாக...

அழகை தரும் இயற்கை பொடி...!

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன பொருட்களை. எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம் கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்உலர்ந்த மகிழம் பூ-200கிராம்கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்கோரைக்கிழங்கு பொடி-100கிராம்உலர்த்திய...

Wednesday, 8 October 2014

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது....

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில்...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top