
தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில் "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார்....