
திரவ எரிபொருள் கசிவால் விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த மாதம் 19-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுவதாக இருந்தது. இந்த ராக்கெட் மூலம் ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளும் இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படஇருந்தன. விண்ணில் செலுத்தும் கடைசி...