
திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் அஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டுருக்கிறது ஏறக்குறைய 35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப் பட்டது டன் எடை கொண்ட அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.அதற்கான...