கனடாவின் வடக்கு பகுதி வடதுருவத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி பகுதியில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த பனிமலைகள் தற்போது வெப்ப உயர்வு காரணமாக உருகி தரைப்பகுதி தெரிந்தது.
அந்த இடத்தில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்த தாவரங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனி உறைந்தபோது இவையும் உறைந்துபோய் இருந்தன. இதனால் இந்த தாவரங்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.
ஆனால் இப்போது பனி விலகியதும் மீண்டும் அந்த தாவரங்கள் உயிர்பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.