திரைக்கதையில் ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது.
அந்தவகையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ ரசிகர்களை மிரட்டி வருகிறது என்றால் மிகையல்ல. தமிழில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன.
ஸ்பாட் லைட் மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டு இருந்தது. சுமார் 60க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இப்படம் ரசிகர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் மிரட்டியுள்ளது. இப்படம் வெளிவந்த ஒரு வாரத்தில் மட்டும் 4.2 மில்லியன் வசூலை குவித்துள்ளது.