தேவையானவை:
முள்ளங்கி - 3
தயிர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
• தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.
• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு).
• பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் .
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.
• இந்த முள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உடல் குளிர்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது.