.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 September 2013

ஜெயலலிதாவுடன் துக்ளக் சோ திடீர் சந்திப்பு!



சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாள்யொட்டி (17ம் தேதி) அவருககு,அட்வான்ஸ்’ பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது

sep 16 jayalalitha_20120206

 


இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதே சமயம், அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


இதற்கிடையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவை அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் முதல்வரை சந்திப்போரின் விவரங்கள் பட்டியலில், சோவின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்து குறிப்பிடத்தக்கது!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top