சூப்பர்மேன் 75-வது பிறந்த நாளையொட்டி கனடா அரசு தங்க நாணயம் உள்ளிட்ட 7 வகை நாணயங்களை வெளியிடுகிறது.
உலகம் முழுவதும் காமிக்ஸ் புத்தக வாசகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது சூப்பர்மேன் கதாபாத்திரம்.1938 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோ சஸ்டர் என்பவர் உருவாக்கினார்.
இதற்கு உறுதுணையாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி சீகல்."சூப்பர்மேனின்' 75-வது பிறந்தநாளையொட்டி கனடா அரசு தங்கம், வெள்ளி, நிக்கல் உலோகம் உள்பட 7 வகை நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
14 காரட் தங்க நாணயங்களில் சூப்பர் மேனின் உருவத்தை பொறிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி கனடாவின் குடியேற்ற அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் கூறும்போது, எங்களது அரசு கனடாவின் வரலாறு, பாரம்பரியம், போன்றவற்றை கொண்டாடுகிறது. சூப்பர்மேன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல், பண்புகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளது என்றார்.