

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார்.
கடந்தாண்டு இந்தி நடிகர் அக்ஷய் குமார் துவக்கிவைத்தார். இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள், இந்தாண்டு நவம்பர் 20ம் தேதி இவ்விழா துவங்கவிருக்கிறது.
“இந்தாண்டு விழாவினை துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ரஜினி இவ்விழாவில் பங்கேற்றால் கெளரவமாக கருதுகிறோம்” என்று விஷ்ணு வாக் கூறியுள்ளார்.
அக்டோபர் மாத இறுதிவரை ரஜினியின் பதிலுக்காக காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.