மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும். தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கணனியை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், கணனி 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.