
விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை.
இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுவரை என்னுடைய படங்கள் 7 முறை ஆஸ்கர் போட்டிக்கு சென்றுள்ளது. விருது கிடைக்கிறதா என்பதைவிட இந்திய படவுலகின் திறமை அமெரிக்க படங்களின் போட்டி விழாவில் பங்கேற்பதே ஒருவிதத்தில் சிறப்பு. இந்த பாணியில்தான் சத்யஜித்ரே இந்திய படங்களை உலக அளவுக்கு கொண்டு சென்றார். அமெரிக்காவை பொறுத்தவரை நாம் இப்போது வெறும் பார்வையாளர்களாகவும், டூரிஸ்ட்டுகளாகவும் மட்டுமே இருக்கிறோம் என்றார்.



16:47
ram
 Posted in: