அறிவியல் சார்ந்த பின்னணியுடன் அப்புச்சி கிராமம் என்ற புதிய படம் உருவாகிறது. |
எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார். ![]() இவர், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். ஜி.எம்.குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என கைதேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விஷால்.சி இசையமைக்கும் இப்படத்தை பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார். இதுகுறித்து இயக்குனர் வி.ஆனந்த் கூறுகையில், எப்பொழுது ஒரு படம் மனித உறவுகளின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறதோ அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும். அதுபோல் தன் படமும் இந்த வரையறைக்குள் வரும் என அழுத்தமாக கூறியுள்ளார். |
Sunday, 13 October 2013
அறிவியல் பின்னணியில் அப்புச்சி கிராமம்!

