.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 21 October 2013

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.



இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முன வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுள் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.





20 - tec Startpage-Home-Page-Virus


ஸ்டார்ட்பேஜ் என்ன செய்கிறது என்றால் கூகுளில் நேரடியாக தேடாமல் தன் மூலமாக கூகுளுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு ஸ்டார்ட்பேஜ் மூலம் கூகுளுக்கு செல்லும் போது வழக்கமாக கூகுளில் தேடும் போது நிகழும், ஐபி முகவரி சேகரித்தல், தேடல் முகவரி சேமிப்பு போன்றவை இல்லாமல் தேடிவிட்டு திரும்பலாம் என்கிறது. அதாவது தேடலில் சுவடு இல்லாமல் நிம்மதியாக தேடிக் கொள்ளலாம் என்கிறது.


அத்துடன் கூகுள் உள்ளிட்ட தளங்கள் இணையவ்ச்சிகள் கம்யூட்டருக்குள் அனுப்பும் குகுகீஸ் சாப்ட்வேரையிம் தடுப்பதாக ஸ்டார்ட்பேஜ் சொல்கிறது. கூகுள் சார்ந்த தேடிய‌ந்திரங்கள் பல‌ உண்டு. அவற்றில் இது சற்றே வித்தியாசமானது.


ஆனால் எந்த அளவு பயனுள்ளது என்று தெரியவில்லை,அதே சமயம் இணைய யுகத்தின் இப்போதைய மிகப்பெரிய பிரச்ச‌னையான இணையவாசிகள் பற்றிய தகவல் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியது.


தேடியந்திர முகவரி:https://startpage.com/

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top