சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கலக்கிய .‘ஷோலே’ படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக தற்போது இந்தப்படத்தை ‘3டி’யில் உருவாக்கியுள்ளார்கள்.இதையடுத்து மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் – நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்ஷனை அள்ளிய ‘ஷோலே’ படமும் 3டியில் வெளியாக இருக்கிறது.
இந்திய திரையுலகில் வெளியான படங்களில் முக்கியமான படங்களை பட்டியலிட்டால், அதில் தவறாமல் இடம்பிடிக்கும் படம் ‘ஷோலே’. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் பலர் நடிப்பில் 1975 ஆகஸ்ட் 15ல் வெளியானது ‘ஷோலே’. அமிதாப், தர்மேந்திரா மட்டுமல்ல இந்தப்படத்தின் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானுக்கும் இந்தப்படம் புகழ்மாலை சூட்டியது.
இந்தப்படம் வெளியானபோது முதல் இரண்டு வாரங்களுக்கு வசூல் குறைவாகவே இருந்தது. ஆனால் 3ஆம் வாரத்தில் இருந்து வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது. அதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது ‘ஷோலே’. அதுமட்டுமன்றி 100 திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது.
‘3டி’க்கு மாற்ற சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து முடித்துள்ள இந்தப் படத்தை யுடிவி மோஷன் பிக்ஷர்ஸ் நிறுவனம் வரும் 2014 ஜனவரி 3ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறது.