ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரியின் மகன் ஆதர்ஷ் சாஸ்திரி, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆம் ஆத்மி கட்சியில் ஆதர்ஷ் சாஸ்திரி நேற்று இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் கொள்கைகள் தன்னை கவர்ந்ததால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2014ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் போட்டியிடத் தயார் என்று ஆதர்ஷ் சாஸ்திரி கூறினார்.



17:11
ram

Posted in: