கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.
”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.
இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.
அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது...