மூன்று வகையன குணங்கள்
1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.
2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .
3. தமோ குணத்தின் இலட்சங்கள்
சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.
எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.
ரஜோ குணத்தின் இலட்சணங்கள்:
மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமோ குணத்தின் இலட்சங்கள் :
எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.
இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?
சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.
ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.
தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.