.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 17 December 2013

புகழ்ச்சி....?



புகழ்ச்சி இது ஒரு அதிசய மருந்து. இதனை உருவாக்க எந்த ஒரு கருவியும் தேவையில்லை. நாமே நமது எண்ணத்தால் இதனை உருவாக்கிட முடியும். இந்த மருந்தை மற்றவருக்குக் கொடுப்பதனால் “புகழ்பவரும் மகிழ்ச்சி அடைகிறார்! புகழப்பட்டவரும் மகிழ்ச்சி அடைகிறார்!!”.

இந்த அதிசய மருந்திற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ண அலைகளே இதற்குக் காரணம்.

 பயன்கள்:

 உங்கள் குழந்தைகளிடம் தேர்விற்கு முன்னரோ அல்லது தினசரியிலோ சபாஷ்! நீ நன்றாகப் படிக்கிறாய் என்று கூறிப்பாருங்கள். இந்த மருந்தைக் கொடுத்தவுடன் குழந்தை முன்பு படித்ததை விட மேலும் ஆர்வமாக படிக்கத் தொடங்குகிறது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

வியாபாரத்தில் உங்கள் வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்பிற்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்  போது அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு மிகையாகக் கிடைக்கிறது.

இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ்மிக்கவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.


அதிசய மருந்து பற்றி மூத்த அறிஞர்கள் கூறுவது:

சொல்வேந்தர் சுகி சிவம்: பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!! பிறர் உங்களைப் பாராட்டாத பொழுதும் நீங்கள் மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தத்துவ ஞானியும், மனோ தத்துவ நிபுணரும் ஆன வில்லியம் ஜேம்ஸ் கூறுகையில், “மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்”.

நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது பாய்ச்சும் போது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது. உங்கள் மீது நீங்கள் வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top