அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ளது இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு அமெரிக்க இந்தியர் பாபிஜிண்டால் போட்டியிட உள்ளார்.இந்த ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்களை தற்போதைய சர்ச்சையின் போது(ம) முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், அமெரிக்க இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய லூசியானா மாநில கவர்னருமாக பாபி ஜிண்டால் உள்ளார்.சமீப காலமாக லூசியானாவில் கல்வி உதவி தொகை வழங்குதல், வருமான வரியை நீக்கியது, அதிபர் ஒபாமா கொண்டு வந்துள்ள மருத்துவ உதவி திட்டத்துக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே இவரது செல்வாக்கை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் லூசியானா, லோவா, நியூஹாம்ப் ஷியர் பகுதி மக்களிடம் அதிக ஒட்டுகளை பெற முடியும் என்றும் இவரது கடினமான உழைப்பு மற்றும் மக்கள் செல்வாக்கு மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் இவர் குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து இருந்தது நினைவு கூற்த்தக்க்து..