'ஜில்லா' பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்த பின்னர் இன்னும் ஸ்பீடாக பட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பாடல் காட்சிகளை ஜப்பான், ஹைதரபாத்தில் ஷூட் செய்த பின்னர், இப்போது பொள்ளாசியில் ஷூட் செய்து இருக்கிறார்கள்.
பசுமையான வயல்வெளிகள், தென்னை மரத் தோப்புகள், சோலைகளுக்கு நடுவில் விஜய் பாடுவதாக படத்தின் ஓப்பனிங் பாடல் இருக்கிறதாம்.
பொள்ளாச்சி விஜய்க்கு ரொம்ப ராசியான இடமும் கூட.
'வேட்டைக்காரன்', 'வேலாயுதம்' உட்பட பல படங்களின் பாடல் காட்சிகள் பொள்ளாச்சியில் ஷூட் செய்யப்பட்டவைதான்.
இப்போது 'ஜில்லா' படத்திற்கு செம மாஸ், க்ளாஸாக விஜய்யுடன் 80 நடனக்கலைஞர்களும், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் பங்கேற்றுள்ளனர்.
அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராஜு சுந்தரம். இதில் அரசியல் குறித்து எந்த வரியும் இல்லையாம்.
டி.இமான் இசையில் படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் விஜய், ஸ்ரேயா கோஷல் பாடிய மெலோடி பாடலைத்தான் ஜப்பானில் பூக்கள் பூத்து குலுங்கும் ஒரு தோட்டத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள்.