மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. | |
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே. ![]() மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். |
Wednesday, 25 September 2013
ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!

