எல்.ஜி. நிறுவனமானது வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்த எல்.ஜி.யின் வளையக் கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல் தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் எல்.ஜி. வெளியிட்டுள்ள தகவலின் படி ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போனானது நெகிழ்ச்சியான 6 அங்குல ஓ.எல்.ஈ.டி. திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் எ 177 கிராம்கள் என்பதுடன் 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர் மூலம் ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போன் இயங்குகின்றது. இதுதவிர 2GBரேம், 13- மெகாபிக்சல் கேமரா போன்ற வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
'மல்டிடாஸ்கிங்' செயற்பாடுகளுக்காக திரையை இரண்டாக பிரிக்கக்கூடிய 'டுவல் விண்டோஸ்' வசதி, வெவ்வேறு விதமாக திரையை அண்லொக் செய்யும் 'சுவிங் லொக் ஸ்கிரீன்' வசதி, போனின் பின்புறத்தில் விழும் சிறு கீறல்களை சில நிமிடங்களில் தானாக போக்கிக்கொள்ளும் 'self-healing' தொழில்நுட்ப வசதி என்பன அவற்றில் சிலவாகும். இந்த ஃபோன் எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எல்.ஜி. நிறுவனம் அறிவிக்கவில்லை.