பெண்களுக்கு
கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும்
அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி
கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும்,
மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில
நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர். இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம். இது எதனால் நிகழ்கின்றது? கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது. கரு முட்டை உருவாதல் முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது கர்ப்பப்பை வாயில் தொற்று நோய் அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் பின்னர் மிகவும் விரைவாக நின்றுவிடும். சளிப்பிளவு பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம். நஞ்சுக்கொடி நகர்வு நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும். கருப்பை கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம் மாறிய கர்ப்பம் கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும். கருச்சிதைவு இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது. |
Monday, 20 January 2014
கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!
18:49
ram